மக்களுடன் தொடர்பை மேம்படுத்த, சமூக வலைத்தளத்தை கையில் எடுக்கிறது தெலுங்கானா காவல்துறை

|

சமூக வலைத்தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. மக்களின் இந்த புதிய வாழ்க்கை முறை மூலம் மனித சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகள் மட்டுமின்றி தீமையான விளைவுகளும் ஏற்படுகிறது. இது தவிர, சமூக வலைத்தளங்களுக்கு பெரியளவிலான தாக்கம் மட்டுமின்றி, நம்மை நாமே காணும் தன்மை, மற்றவர்களைக் காணும் தன்மை மற்றும் சுற்றிலும் உள்ளவர்களோடு நாம் பழகும் விதம் ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களுடன் தொடர்பை மேம்படுத்த, சமூக வலைத்தளத்தை கையில் எடுக்கிறது தெலு

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான தெலுங்கானாவில் உள்ள எல்லா காவல் நிலையங்களுக்கும் மக்கள் இடையிலான தொடர்பை மேம்படுத்த ஒரு பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து டிஜிபி எம்.மஹேந்தர் ரெட்டி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட இலக்கை அடைய, காவலர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களோடு உள்ள நட்பை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

இந்த மாநிலத்தில் ஏறக்குறைய 800 காவல் நிலையங்கள் காணப்படுகின்றன. இது குறித்து டிஜிபி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத்தில் நடைமுறைப்படுத்திய தொழில்நுட்ப முயற்சிகளை, மற்ற எல்லா மாவட்டங்களுக்கும் அதன் எல்லா காவல் படை பிரிவுகளுக்கும் என விரிவுப்படுத்தப்பட உள்ளது.

மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பு மேசை, குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மனு மேலாண்மை அமைப்பு ஆகியவை காணப்படும். மூன்றாம் தரப்பு கால் சென்டர் மூலம் மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் குடிமக்களின் திருப்திகரமான மதிப்பீடு அளிக்கப்படும்.

2018 என்பது தொழில்நுட்பம் மற்றும் குடிமக்களோடு நட்பு கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடும் ஆண்டாக இருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான வருட திட்டத்தை வெளியிட்ட அவர், சேவை விநியோகத்தை மேம்படுத்துதல், ஏற்கனவே உள்ள மற்றும் நடைபெறவுள்ள குற்றங்களை தடுத்தல், அமைப்பை கட்டியெழுப்புதல் மற்றும் மாற்றத்தை கொண்டு வருதல், பணித்தன்மையை நிர்வாகம், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல், குழுக்கள் மற்றும் டொமைன் வல்லுநர்களை ஒருங்கிணைத்தல், சாலை பாதுகாப்பு மற்றும் சாலை நெரிசலை நிர்வாகிப்பது, நகரங்களை பாதுகாப்பாக மாற்றுதல் போன்ற எட்டு இலக்குகளை முன்வைத்து, அவற்றை அடைய முயற்சிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, அமைதி என்பது மிக முக்கியமான ஒன்றாக திகழ்வதால், அதற்கான முதலீடுகளை ஈர்க்கவும், நலத்திட்ட பணிகளைச் செய்ய மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட, 60 ஆயிரம் பேர் கொண்ட ஒரு உறுதியான படையை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் மேற்கூறிய செயலை பொறுப்பேற்பது தொடர்பான மற்றும் குழு கூட்டமைப்பு தொடர்பான முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்க முடியும் என்று காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

14546 என்கிற TOLL-FREE நம்பரில் ஆதார்-மொபைல் எண்ணை இணைப்பது எப்படி.?14546 என்கிற TOLL-FREE நம்பரில் ஆதார்-மொபைல் எண்ணை இணைப்பது எப்படி.?

அவர் மேலும் கூறுகையில், ஹைதராபாத், சைபராபாத் மற்றும் ராச்சாகோண்டா ஆகிய காவல்துறை ஆணையங்களின் மூலம் தலைநகரமும், அதைச் சுற்றுபுறங்களின் மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளையும் உட்படுத்த உள்ளதாக, தெரிவித்தார்.

சர்வதேச அளவிலான தரத்துடன் கூடிய திறமை வாய்ந்த காவலர்களாக, முன்னணி காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை, பல விருதுகளைப் பெற்ற ஹைட்கார்ப் என்ற மொபைல் அப்ளிகேஷனுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் பணி தற்போது முழு மாநிலத்திற்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அதற்கு டெஸ்கார்ப் என்று பெயரிடப்பட்டு, ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதேபோல, ஹைக்ஐ என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம், சாதாரண மக்களை போலீஸ் குடிமக்களாக உருவாக்கும் பணி செயல்படுத்தப்பட்டது. அதுவும் முழு மாநிலத்திற்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றங்களை தவிர்த்தல் மற்றும் கண்டுபிடித்தலுக்கு ஹைதராபாத் காவல்துறைக்கு உதவிகரமாக இருந்த கம்யூனிட்டி சிசிடிவி திட்டம், மாநிலத்தில் உள்ள மற்ற 30 மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் ஆணையத்தில் ஒரு சிறிய ஆணை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, ஹைதராபாத்தில் அமைக்கப்பட உள்ள மாநில ஆணை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட உள்ளது.

டிஜிபி மேலும் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் இடுகைகளின் மூலம் சட்ட ஓழுங்குகள் மற்றும் மத நல்லிணக்கம் பாதிக்கப்படலாம் என்பதால், மக்களின் ஈடுபாடு உடன் கூடிய சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பு அறை அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சமூக ஊடக ஆய்வகம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மாநிலத்தின் சைபர் குற்றங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இந்தப் பகுதியில் காவல்துறை அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்துறை தொடர்பான பிரிவுகளிலும் சைபர்கிரைம் அறைகள் உருவாக்கப்படும், என்றார்.

மாநிலம் முழுவதும் உள்ள விசாரணை அதிகாரிகளுக்கு இடையே அறிவுசார்ந்த மேலாண்மை அமைப்பின் மூலம் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், விசாரணை ஆதரவு மையம் ஒன்று ஹைதராபாத்தில் அமைக்கப்பட உள்ளது.

இதில் டொமைன் நிபுணர்கள், தடவியல், மருத்துவம் மற்றும் சட்ட வல்லுநர்கள் இடம்பெற்று இருப்பதோடு, அது முழுநேரமும் பணியாற்றும். மேலும் காவல்துறைக்கும் குடிமக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வளர்த்து, அதன்மூலம் குற்றங்களைத் தடுத்து பாதுகாப்பான சுற்றுபுறங்களை உருவாக்கும் வகையில், ஒரு சமூக காவலர் ஆதரவு மையம் உருவாக்கப்பட உள்ளது.

Best Mobiles in India

English summary
All police stations in the Indian state of Telangana will now have a Facebook account and Twitter handle for communication with people on a daily basis.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X