ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்: சரியான நேரத்தில் டெலிவரி செய்த போலீஸ்..! சுவாரஸ்ய சம்பவம்.!
இப்போது ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை
பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் ஆன்லைனில் பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார், ஆனால் டெலிவரி செய்ய போலீஸ் ஒருவர் உணவு பொட்டலத்துடன் வீடு தேடி வநதுள்ளார். இப்போது இந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டோ எனும் மாகாணத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னுடைய மதிய உணவினை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். பின்பு சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டின் காலிங் பெல் சத்தமும் கேட்டுள்ளது.

உடனே ஆர்டர் செய்த உணவினை கொடுத்து செல்வதற்காக டெலிவரி பாய் தான் வந்திருப்பார் என கதவை திறந்து பார்த்தபெண்ணிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. தான் ஆர்டர் செய்த உணவு வந்த நிலையில், அதனை கொண்டு வந்த
நபரின் மூலம் தான் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார். அதாவது போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணிற்கு உணவுடெலிவரி செய்துள்ளார்.

குறிப்பாக வாசலில் உணவுடன் நின்ற போலீஸ் ஒருவரை பார்த்ததும் அந்த பெண் திகைத்து போயுள்ளார். புஹர் என்ற அந்த போலீஸ்காரர், நீங்கள் எதிர்பார்த்த ஆள் நான் இல்லை, ஆனால் உங்களுக்கு டெலிவரி செய்ய வந்த நபர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். எனவே நானே உங்களின் உணவை டெலிவரி செய்வதற்காக வந்தேன் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

மேலும் அந்த பெண்ணும் சிரித்துக் கொண்டே, பார்சலை வாங்கிக் கொண்டு அந்த காவல் அதிகாரிக்கு நன்றியும்தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் அதிக வைரலாகி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்ய வந்த நபர் போக்குவரத்து விதிமீறலின் பெயரில் கைது செய்யப்பட்டதால்அந்த உணவு வீணாகி விடக் கூடாது என்றும், சம்மந்தப்பட்ட நபர் பசியில் அவதிப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும்,
போலீசாரே உணவு டெலிவரி செய்துள்ள சம்பவம் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவிலும் பிடித்த உணவுகளை வாங்கி சாப்பிட சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.மேலும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டுசலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications