Home
Social media

ஆன்ட்ராய்டு சதானங்களில் புதிய அப்ளிக்கேஷனை வழங்கும் பின்ட்ரஸ்ட்!

By Super

சமூக வலைத்தளமான பின்ட்ரிஸ்ட் ஐபேட் மற்றும் ஆன்ட்ராடு எலக்ட்ரானிக் சாதனத்திற்கான அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

வெப் மற்றும் ஐபோன் போன்றவற்றின் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்த பின்ட்டிரஸ்டு வலைத்தளம் பிரத்தியேகமாக அப்ளிக்கேஷன் வசதியினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் எங்கிருந்தாலும், எவ்விடமாக இருந்தாலும் பின்ட்ரஸ்டில் விரும்பிய விஷயத்தினை தெரிவிக்கலாம்.

ஆன்ட்ராய்டு சதானங்களில் புதிய அப்ளிக்கேஷனை வழங்கும் பின்ட்ரஸ்ட்!

மனதிற்கு பிடித்த விஷங்களையும், கனவுகளையும் அழகாக வெளிப்படுத்தும் சமூக புக்மார்கிங் வலைத்தளமான பின்ட்ரஸ்ட் அப்ளிக்கேஷன் வசதியினை வழங்குவது ஓர் சிறந்த விஷயமாகும்.

இதனால் பின்ட்ரஸ்டு வலைத்தளத்தை ஒவ்வொரு முறையும் லாகின் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த அப்ளிக்கேஷனை ஒருமுறை லாகின் செய்தால் போதும். நினைத்த பொழுது எளிதாக க்ளிக் செய்து விரும்பிய விஷயங்களை வெகு சீக்கிரமாக நண்பர்களுடன் பகிர்ந்து

கொள்ளலாம்.

ஐபேடிலும், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களிலும் பின்ட்ரஸ்டின் இந்த அப்ளிக்கேஷனை எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். இது மட்டும் அல்லாமல் பின்ட்ரஸ்ட் மூன்று புதிய அப்ளிக்கேஷன்களையும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில் அறிமுகம்

செய்கிறது. இதை இலவாசமாக டவுன்லோடு செய்ய முடியும்.

இந்த புதிய அப்ளிகேகஷனில் நிறைய வசதிகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. பிடித்தமான பொருளை ஒருவர் பின் செய்திருக்கிறார் என்றால், அதன் மேல் டபில் க்ளிக் செய்தால் போதும், அந்த பிராண்டு வைத்தளத்திற்கு நம்மை அழைத்து செல்லும் வசதியும் இதில் உள்ளது.

அந்த குறிப்பிட்ட பொருளை பற்றி மற்ற நண்பர்கள் பின்ட்ரஸ்டில் என்ன தகவலை பகிர்ந்திருகின்றனர் என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X