கணினித் துறையின் பாகுபலி உயிரோடு இருக்கிறாரா?- வைரல்.!
பெரிய அளவிலான அறிமுகமே தேவையில்லாத, கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமை சக்தியாக இருந்தவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ். பிப்ரவரி 24 ஆம் தேதி, சான் ப்ரான்ஸிஸ்க்கோவில் பிறந்து, பால் மற்றும் க்ளாரா தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் அவரின் காதலியான க்ரிஸ்ஸன்
கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு,ஆன்மீக ஞானம் தேடி இந்தியாவிற்கு பயணம் செய்து, பின் அமெரிக்கா திரும்பி 1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் அவரின் காதலியான க்ரிஸ்ஸன் பென்னன் ஆகியோருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

128கே ரேம் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார்
மேலும் இவர் ஆப்பிள் நிறுவனத்தின் 128கே ரேம் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது, 1998ல் முதல்முறையாக ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ சந்தித்த போது வெறும் 5 நிமிடத்திலேயே அவருடன் இணைந்து பணியாற்றவேண்டும் என முடிவு செய்துவிட்டதாக ஒருமுறை டிம்குக் கூறியுள்ளார்.

56-ஆம் வயதில்..
பல்வேறு சூழ்நிலைகளில், ஸ்டீவ்ஜாப்ஸ் தனது மகள் லிசாவிடம் தனக்கு முறையான கல்வியில் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணைய புற்றுநோய் உடனான பெரிய போராட்டத்திற்கு பின்பு தனது 56-ஆம் வயதில் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸை வைரலாக்கியுள்ளது
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு புகைப்படம் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை வைரலாக்கியுள்ளது. எகிப்த் பகுதியில் எடுக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே இருந்தது.
ஷூ அணியவில்லை
இந்த புகைப்படத்தை பார்த்த பல்வேறு மக்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார் என்று பதிவிட்டனர். அதற்கு நில ஆதாரங்களையம் அவர்கள் கூறினர், அதுஎன்னவென்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் ஷூ அணிய விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ
அணியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே தெரியவில்லை
இருந்தபோதிலும் சிலர், ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் கையில் ஆப்பிள் கடிகாரம் அணியவில்லை எனவே இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என நகைச்சுவையாக தெரிவித்தனர். இன்னும் சிலர் இதைப்பார்த்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே தெரியவில்லை என்று தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Conspiracy theorists claim Apple genius Steve Jobs is alive and hiding in Egypt' https://t.co/PePFKf4Jhm pic.twitter.com/yn2il4P1nZ
— The Sun (@TheSun) August 26, 2019


Click it and Unblock the Notifications