Home
Social media

டேட்டிங் வலைதள சேவையான டிண்டரில் அறிமுகமான பெண்ணை நம்பி ரூ.14 கோடி பறிகொடுத்த நபர்.! எப்படி தெரியுமா?

தற்போது உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மோசடி செயல்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் ஏராளமான ஏமாற்ற செயல்கள் நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்நிலையில் டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர் ஒருவர் தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார். அதாவது இத்தாலியைச் சேர்ந்த நிதி ஆலோசகர் டேட்டிங் வலைத்தள சேவையான டிண்டரில் சுமார் HK14மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14 கோடி) இழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேலும் இதுகுறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிண்டரில் அறிமுகமான பெண்ணை நம்பி ரூ.14 கோடி பறிகொடுத்த நபர்.!

குறிப்பாக இந்த டிண்டர் மோசடியில் சிக்கிய ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயதாகிறது என்று சீனா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஹாங்காங்கின் மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் நபருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் முதலீட்டு புரோக்கருக்கும் டிண்டரில் மேட்ச் ஏற்பட்டதே, இந்த மோசடியின் ஆரம்பப் புள்ளி என்று கூறப்படுகிறது.

அதாவது கடந்த பிப்ரவரி மாதம் டிண்டரில் மேட்ச் ஆனதைத் தொடர்ந்து நிதி ஆலோசகர் மற்றும் முதலீட்டு புரோக்கர் இருவரும் வாட்ஸ்அப் செயலியில் உரையாடலை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இவர்களின் டேட்டிங் ஆன்லைனில் ஜோராக நடந்து வந்துள்ளது.

டேட்டிங்கை தொடர்ந்து ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் ஆலோசனையைக் கேட்டு மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 23-ம் தேதி பல வலைத்தளங்களில் நிதி ஆலோசகர் முதலீடு செய்துள்ளார். எனவே இதன்மூலம் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 22 தனித்தனி பரிவர்த்தனைகளில் நிதி ஆலோசகர் ர்மு 14.2 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 14 கோடி) முதலீடு செய்துள்ளார்.

மேலும் இவரின் முதலீடுகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று அந்த பெண் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த பெண் கூறியபடி தனக்கு லாபாம் கிடைக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த நிதி ஆலோசகர், காவல் துறை உதவியை நாடினார். அந்தசமயம் காவல் துறையினர் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் தெரிந்து கொள்கிறார்.

அதேபோல் முதலீட்டாளர்களை ஏமாற்ற பல்வேறு போலி வலைத்தளங்கள் அதிக லாபம் கொடுப்பதாகக் கூறுவதை நம்பக்கூடாது எனவும், பொதுமக்கள் போலி முன்பின் தெரியாத போலி வலைத்தளங்களை நம்பி எவ்வித முதலீடுகளையும் செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிண்டரில் அறிமுகமான பெண்ணை நம்பி ரூ.14 கோடி பறிகொடுத்த நபர்.!

மேலும் மோசடி செயல்கள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு மோசடி செயல் நடந்தால் அது அங்கு தானே நடந்திருக்கிறது இங்கு வரவில்லையே என்றும் யாருக்கோ நடந்திருக்கிறது நமக்கெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் அலட்சியம் காட்ட வேண்டாம். டிஜிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும்.

அதேபோல் டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பு என்பது மிக அவசியம். கையில் இருப்பது உங்கள் ஸ்மார்ட்போன் தான் என்றாலும் அதன் தகவலும் விவரங்களும் காற்றில் டேட்டாவாக அலை மோதிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Person who trusted a girl he met on Tinder and cheated him of Rs 14 crore.! Do you know how? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X