டிவிட்டரில் டிவிட் செய்து ஜெயிலுக்கு போனவர்கள்!!!

|

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் என்ற சமூக வலைதளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. உலக அளவில் இவைகளின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டே போகிறது.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் உலக அளவில் பல மாற்றங்களை கொண்டு வரலாம் என்று சொல்லும் அளவுக்கு இவைகளின் பயன்பாடு இன்றைய மக்களிடத்தில் உள்ளது.

இது போன்ற சமூக வலைதளங்களில் மற்றவர்களை புண்படுத்தும் வகையிலோ அல்லது வன்முறையை தூண்டும் வகையிலோ டிவிட் மற்றும் கமெண்ட் செய்து பலர் கைதாகி உள்ளனர்.

இந்தியாவில் இரு பெண்கள் பேஸ்புக்கில் கமெண்ட் போட்டு கைதாகி உள்ளனர். டிவிட் செய்தும் சிலர் இந்தியாவில் கைதாகி உள்ளனர். இப்பொழுது, டிவிட் செய்ததால் கைதானவர்கள் பற்றிய தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

டிவிட்டர்

டிவிட்டர்

ஜிம்மர்மேன் என்பவர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டார். இதே போல தானும் துப்பாக்கியால் மற்றவர்களை சுட்டு தப்பித்துவிடுவேன் என்று மார்க் எனும் 15 வயது சிறுவன் டிவிட் செய்தான் அதற்காக கைது செய்யப்பட்டான்.

டிவிட்டர்

டிவிட்டர்

டோன்ட் ஜாமர் சிம்ஸ் எனும் 21 வயது இளைஞன் ஒபாமாவை கொலை செய்வதாக டிவிட் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

டிவிட்டர்

டிவிட்டர்

ஜார்விஸ் பிரிட்டன் எனும் 26 வயது இளைஞன் பிரசிடென்ட் ஒபாமாவை கொலை செய்வதற்க்கு மற்றவர்களை தூண்டுவதுபோல் டிவிட் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

டிவிட்டர்

டிவிட்டர்

ஆஸ்ட்டிரேலியாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிவிட் செய்தான் அதற்காக கைது செய்யப்பட்டான்.

டிவிட்டர்

டிவிட்டர்

வாண்டா போட்குர்ஸ்கி என்ற களவாணி பெண் முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என டிவிட் செய்தார். இந்த டிவிட்டை வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

டிவிட்டர்

டிவிட்டர்

பள்ளிகூடத்தை சுடபோவதாக பிளோரிடாவை சேர்ந்த மாணவன் டிவிட் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

டிவிட்டர்

டிவிட்டர்

மெடல் வாங்காத ஒரு ஒலிம்பிக் வீரரை சுடப்போவதாக 17 வயது சிறுவன் டிவிட் செய்தான் அதற்காக கைது செய்யப்பட்டான்.

டிவிட்டர்

டிவிட்டர்

கொலை செய்யப்பட்ட இராணுவ வீரரை பற்றி அவதூறாக டிவிட் செய்ததால் இங்கிலாந்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

டிவிட்டர்

டிவிட்டர்

பால் ஜாம்பர் என்பவர் தான் போகும் விமானம் தாமதமாக வரும் என்பதை அறிந்து அதை பற்றி அவதூறாக டிவிட் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

டிவிட்டர்

டிவிட்டர்

எலியாட் மாடிசன் என்பவர் போலீஸ் பற்றி அவதூறாக டிவிட் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

டிவிட்டர்

டிவிட்டர்

தமிழகத்தில் ரவி ஸ்ரீனவாசன் என்பவர் காரத்திக் சிதம்பரத்தின் சொத்து விவரத்தை பற்றி டிவிட் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

டிவிட்டர்

டிவிட்டர்

சரவண குமார் பெருமாள் என்பவர் பாடகி சின்மையி பற்றி அவதூறாக டிவிட் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X