Home
Social media

கேரள வெள்ள நிதியை தொழிலுக்கு பயன்படுத்தியதா பேடிஎம்? நிறுவனரை கதற விட்ட நெட்டிசன்கள்

10 லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏராளமானோர் கேரளாவுக்கு நிதி உதவியை வாரி வழங்கி வருகின்றனர்.

By Rajivganth Gurusamy

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், கேரளாவில் கனமழை பெய்தது. இதனால் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பேட்டோர் இறந்துள்ளனர்.

கேரள வெள்ள நிதியை தொழிலுக்கு பயன்படுத்தியதா பேடிஎம்?

மேலும், 10 லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏராளமானோர் கேரளாவுக்கு நிதி உதவியை வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம் நிறுவனர் வழங்கிய நிதி உதவி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சன்னிலியோன், கல்லூரி மாணவி:

சன்னிலியோன், கல்லூரி மாணவி:

கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ரூ.5 கோடி கேரளாவுக்கு நிதியுதவி கொடுத்துள்ளார். மேலும், வறுமையில் வாடிய கல்லூரி மாணவி ஹானான் காலையில் மீன் விற்று அதில் கிடைக்கும் வருவாயை வைத்து கல்வி கட்டணம் செலுத்தி வந்தார். இதையறிந்த பல்வேறு தரப்பினரும் அவருக்கு ரூ.1.5 லட்சம் வரை நிதியுதவி அளித்தனர். அந்த பணத்தை முழுவதையும் ஹனான் கேரளா வெள்ள நிவாரணத்துக்காக பெரும் தன்மையாக வழங்கி விட்டார். இவரின் செயலை அனைவரும் பாராட்டினார்.

ரூ.9 ஆயிரம் நிதியுதவி கொடுத்த சிறுமி:

ரூ.9 ஆயிரம் நிதியுதவி கொடுத்த சிறுமி:

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிவசண்முகநாதன்-லலிதா மகள் அனுப்பிரியா (8). தனியார் பள்ளி மாணவி. இவர் சைக்கிள் வாங்க 4 ஆண்டாக சேமித்த பணம் ரூ.9 ஆயிரத்தை வரைவோலை மூலமாக கேரள முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இந்த மாணவியை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். ஏழை எளியோர்களும் தங்களின் சக்தியை மீறிய நிதி உதவிகளை மனதார செய்து வருது வியக்க தக்க வகையில் உள்ளது.

பேடிஎம் நிறுவனர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி:

பேடிஎம் நிறுவனர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி:

இந்தியாவில் முன்னணி இ-வணிக தளமான பேடிஎம் நிறுவனத்தின் தலைவரான விஜய்சேகர் கேரள வெள்ள நிவாரணமாக ரூ.10,000 நிதி உதவி கொடுத்தாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் இதைபோல பலரும் நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

10 கோடி நிதி உதவி பெற்ற பேடிஎம்:

10 கோடி நிதி உதவி பெற்ற பேடிஎம்:

இந்தியாவில் தனது 4 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.10 கோடி கேரளா வெள்ள நிவாரண நிதி பெற்றதாக பேடிஎம் நிறுவனத்தின் அதிகார பூர்வ தளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

கடும் விமர்சனம்:

கடும் விமர்சனம்:

கேரள வெள்ள இழப்பை பயன்படுத்தி தனது தனிப்பட்ட தொழில் மேம்பாட்டிற்காக பேடிஎம் நிறுவர் நிவாரணம் பெற்றுவிட்டதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பெரும் செல்வந்தராக விளங்கினாலும், தாராளமாக பணம் அளிக்காமல் விளம்பர நோக்கில் செயல்பட்டுள்ளார என்று பலரும் கண்டம் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்களின் கடும் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Paytm CEO Vijay Shekhar trolled for donating Rs 10000 to Kerala floods : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X