நேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து.! அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

சில நேரங்களில் விசித்திரமான விஷயங்கள் நாம் எதிர்பார்த்திடாத நேரத்தில் வெளியே வந்து நம் முகத்தின் முன் நிற்கும் என்பார்கள். அதே போல் தற்பொழுது ஒரு பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர் முகத்தில் நெருப்பு விழுந்துள்ளது

|

சில நேரங்களில் விசித்திரமான விஷயங்கள் நாம் எதிர்பார்த்திடாத நேரத்தில் வெளியே வந்து நம் முகத்தின் முன் நிற்கும் என்பார்கள்.

அதே போல் தற்பொழுது ஒரு பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர் முகத்தில் நெருப்பு பந்து நேரலையில் விழுந்த வீடியோ பதிவு வைரல் ஆகிவருகிறது.

தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர்

தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர்

பாகிஸ்தான்: பாக்கிஸ்தான் இல் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர், நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவரின் முகத்தில் நெருப்பு பந்து ஒன்று வந்து விழுந்ததில், அவர் அலறி குதித்து ஓடிய வீடியோ காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்டூடியோ விளக்கு

ஸ்டூடியோ விளக்கு

தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ஸ்டூடியோவில் உள்ள விளக்குவெடித்து இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

தொடர்ந்து செய்தி வாசித்த செய்தியாளர்

தொடர்ந்து செய்தி வாசித்த செய்தியாளர்

வீடியோ பதிவில் விளக்கு வெடிக்கும் சத்தம் கேட்டு செய்தியாளர் மிரளுவதும், அதனைத் தொடர்ந்தும் அவர் செய்தியை வாசித்து கொண்டிருக்கும் பொழுது கேமரா அருகில் சிலர் ஓடுவதும் ரெக்கார்ட ஆகியுள்ளது. ஸ்டூடியோவில் வெடிச் சத்தம் கேட்டும், நேரலை என்பதனால் செய்தியாளர் தொடர்ந்து செய்தியை வழங்கிக்கொண்டிருந்தார்.

வைரல்

வைரல்

அடுத்த சில நொடிகளில் நெருப்பு பந்து ஒன்று முகத்து நேராக வந்து அவரின் மேல் விழுந்தவுடன் அலறிக் குதித்து ஓடிவிட்டார். அதிர்ஷ்டவசமாக அவருக்குத் தீ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விடீயோவின் பதிவு தற்பொழுது சமூகவலைத்தளம் மற்றும் டிவிட்டரில் வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
Pakistani anchor gets hit by ball of fire on live TV Watch viral video : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X