டிக்டாக்கில் பெண்ணுடன் இந்தியில் ரொமான்ஸ்-வசமாக சிக்கிய பாக்.வீரர்.!
டிக்டாக் ஆப் இந்தி பாடலுக்கு இளம் பெண்ணுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட பாகிஸ்தான் வீரர் ஒருவர் டப்ஸ் ஸ்மேச் செய்துள்ளார். இந்த பாடல் தற்போது வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை த
டிக்டாக் ஆப் இந்தி பாடலுக்கு இளம் பெண்ணுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட பாகிஸ்தான் வீரர் ஒருவர் டப்ஸ் ஸ்மேச் செய்துள்ளார்.

இந்த பாடல் தற்போது வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்னை தற்போது வைரல் ஆகி பெரும் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்:
பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா. இவர் 35 டெஸ்ட் போட்டிகளில் 67 இன்னிங்ஸ்ல் விளையாடி 203 விக்கெட்களையும் 24 ஒரு நாள் போட்டிகளிலும்,23 விக்கெட்களையம் வீழ்த்தியுள்ளார்.

வீடியோ வைரல்:
இவர் துபாயில் இளம் பெண் ஒருவடன் டிக் டாக்கில் செயலிலில் இந்தி பாடல் ஒன்றுக்கு வாயை அசைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதைக் கண்டு பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் முன் வைத்தனர்.

கிரிகெட் வாரியம் கடும் கண்டனம்:
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இதுபோன்ற செயல்களில் ஒதுங்கிய இருக்க வேண்டும் என்று அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பெண்கள் வற்புறுத்தல்:
இந்நிலையில் யாசீர் ஷா சார்பில் இதுபற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் துபாய், மால் ஒன்றில் டிக் டாக் செயலியை சேர்ந்த ஊழியர்கள், பாடலுக்கு வாயசைக்கும்படி ஷாவிடம் கேட்டுக் கொண்டனர். முதலில் மறுப்பு தெரிவித்த ஷாவை அவர்கள் வற்புறுத்தியதால் சம்மதம் தெரிவித்தார். இதுதான் நடந்தது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வீடியோ:
இதேபோல துபாயில் நடந்த பிரபல அமெரிக்கா பாடகர் அகோனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் அது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுவும் ரைவல் ஆகியுள்ளது.

பாகிஸ்தான் படுதோல்வி:
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பங்கேற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த இதில் ஆஸ்திரேலிய அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தொரைக் கைப்பற்றியது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷாவும் இடம் பெற்றியிருந்தார்.


Click it and Unblock the Notifications