கல்லூரி கட்டணம் செலுத்த மீன் விற்ற மாணவியின் சுவாரசியம்.!

  கற்கை நன்றே கற்கை நன்றே பிச்னை புகினும் கற்கை நன்றே.! என்று வெற்றி வேற்கை (நறுத்தொகை) என்னும் நூலில் பாண்டிய மன்னரான அதிவீரரமா பாண்டியன் எழுதியுள்ளார்.

  கல்லூரி கட்டணம் செலுத்த மீன் விற்ற மாணவியின் சுவாரசியம்.!

  இந்த வரிகளே மனித குலத்தின் வளர்ச்சிக்கு இன்றி அமையாததாக உள்ளது. ஒருவன் ஏழ்மை நிலையை அடைந்தாலும், அவன் பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும். அவ்வாறு கற்ற கல்வி தான் தனி மனித வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் பயன்படக் கூடியதாக அமைக்கிறது. கற்கை நன்றே என்ற இந்த வரிகளுக்கு ஏற்ப நம் அண்டைய மாநிலமான கேரளாவில் நடந்த சம்பவமும் நமக்கு சுவாரஸ்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஏழ்மையில் மாணவி:

  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஹனான் (21). இந்த மாணவி தொடுபுழாவில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். தாயும், தந்தையும் பிரிந்து விட்டனர். இவருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார்.

  குடும்ப சூழ்நிலையும் வறுமையும் காரணமாக கொச்சிக்கு குடி பெயர்ந்து விட்டார். ஏழ்மை காரணமாக கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தார். இதையொட்டி பகுதி நேர வேலைக்காக டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் முத்துமாலையும் விற்பனை செய்து வந்தார்.

  உடல் நிலை பாதிப்பு:

  இவ்வாறு வேலைகளில் ஈடுபட்டதால் உடல் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கும், கல்லூரிக்கும் கூடுதல் பணம் தேவைப்பட்டதால், கல்லூரி முடிந்தவுடன் அதே சீருடையில் கொச்சி தம்மனம் பகுதியில் மீன் விற்றார். இதுகுறித்து தொலைக்காட்சிகளில் செய்திவெளியானது. இதையறிந்த மலையாள சினிமா இயக்குநர் அருண்கோபி, நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கும் தனது படத்தில் மாணவிக்கு வாய்ப்பு தருவதாக அறிவித்தார்.

  பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் அவதூறு:

  மாணவி ஹனான் குறித்து பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் இவர் ஏழ்மை நிலையில் இல்லை. சினிமா வாய்ப்பு பெறவே இதுபோன்று நடிக்கிறார் என்று தகவல்கள் பறந்தன. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார். மாணவிக்கு ஆதரவாக கேரள மகளிர் ஆணையம் தலையிட்டது.

  முதல்வர் பினராயி விஜயன்:

  இந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் பினராயி விஜயன் மாணவி ஹனான் செயலை நினைத்தால், எனக்கு பெருமையாக உள்ளது. கேரள மக்கள் அனைவரும் அந்த மாணவிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் அந்த மாணவி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டார்.

  மாணவியின் கண்ணீருக்கு ஆறுதல்:

  இந்நிலையில் மாணவி ஹனான் என்னை தனியாக விட்டுவிடுங்கள். எனக்கு எந்த உதவியும் வேண்டாம். தினமும் சாப்பாட்டுக்கு ஏதாவது வேலை செய்து கொள்கிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்தார். மாணவிக்கு ஆதரவாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் கருத்து தெரிவித்தார்.

  கேரள சுறாக்களே நிறுத்துகள்:

  சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் பேஸ்புக்கில் கேரள சுறாக்களே தாக்குதலை நிறுத்துக்கள். தனது வாழ்க்கைய ஒன்று சேர்க்கும் முயற்சியில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணை இழிவு படுத்தும் செயலை பார்த்து வெட்கப்படுகிறேன். நீங்கள் கழுகுகள் பிரதமர் மோடியும் இளமையில் இதுபோன்று சிரமங்களை தாண்டி இன்று சாதித்துள்ளார். ஹனானும் முன்னேற வேண்டும் என்றார்.

  ஒருவர் கைது:

  இந்நிலையில் மாணவியை தவறாக விமர்சனம் செய்த வயநாட்டைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் நேற்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். இவர் ஒரு வீடியோ பிளாக்கர். தன் பிளாக்கில் ஹனானை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்தே மற்றவர்களும் ஹனான் மீது பாய்ந்தனர். நூருதீன் ஷேக் கைதால் மற்றவர்களும் நெட்டிசன்களும் பயத்தில் உள்ளனர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  one arrestedfor triggering hate campaign against hanan : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more