தேர்தலில் வென்ற ஒபாமாவுக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

Posted By: Staff

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. ஒபாமா அவர்களுக்கு உலகமெங்கிலும் இருந்து ஏராளமான வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வரும் ஜனவரி 2013 அன்று ஒபாமா இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார்.

மேலும் ஒபாமா அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்காக ஏராளமானோர் டிவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். அதாவது இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றனர்.

தேர்தலில் வென்ற ஒபாமாவுக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

குறிப்பாக தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒபாவும் அவருடைய மனைவியும் கட்டித் தழுவி இருப்பதுபோல் இருக்கும் போட்டோவுடன் போர் மோர் இயர்ஸ் என்ற டிவிட்டர் வாழ்த்துக்கள்தான் அதிகமானதாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது டுவிட்டர் வரலாற்றில் ஒரு பெரிய சாதனையாகும். அதாவது இந்த போர் மோர் இயர்ஸ் என்ற ஒரே செய்தியை டுவிட்டரில் 5 லட்சத்திற்கும் அதிகமாக ரிடுவிட் செய்திருக்கிறார்கள். அதுபோல் தனது வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறும் வகையில் ஒபாமா நன்றி என்ற செய்தியை 1,44000 முறை ரிடுவிட் செய்திருக்கிறார். இதுவும் டுவிட்டர் வரலாற்றில் சாதனையாகக் கருதப்படுகிறது.

அதாவது ஒரே செய்தி டுவிட்டர் வரலாற்றில் இத்தனை முறை டுவிட் செய்யப்படவில்லை. இதுவே முதல் முறையாகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot