Home
Social media

பிறந்த குழந்தையுடன் டிக் டாக் வீடியோ! கொந்தளித்த மக்கள் நடந்தது இதுதான்!

டிக் டாக்(TikTok) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு, மீண்டும் இந்தியாவில் பயனர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் இன்னும் டிக் டாக் நிறுவனத்திற்குத் தொந்தரவுகள் குறைந்ததாகத் தெரியவில்லை.

டிக் டாக் செயலியைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அதன் பயனர்கள் செய்யும் தவறுகளைத் தான் நாம் கண்டிக்க வேண்டும்.

சில பயனர்கள் தேவையில்லா சில செயல்கள்

சில பயனர்கள் தேவையில்லா சில செயல்கள்

டிக் டாக் பயனர்களின் கலைத்திறன் மற்றும் அவர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று டிக் டாக் நிறுவனம் அண்மையில் தெளிவாகத் தெரிவித்திருந்தது. இருப்பினும் சில பயனர்கள் தேவையில்லா சில செயல்களை, புதுமை படைப்புகளாகக் கருதி வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

பயனர்களின் தவறாக வழி

பயனர்களின் தவறாக வழி

இப்படியான வீடியோ பதிவுகளால் மற்றவர்களும் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என்பதனால், இதற்கு மக்கள் மட்டுமின்றி டிக் டாக் நிறுவனமும் கண்டனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் டிக் டாக் வீடியோக்களை மும்முரமாக டிக் டாக் நிறுவனம் கண்காணிக்கத் துவங்கியுள்ளதாகத் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தையுடன் டிக் டாக் வீடியோ

பிறந்த குழந்தையுடன் டிக் டாக் வீடியோ

ஒடிசா மருத்துவமனை மகப்பேறு வார்டில் உள்ள செவிலியர்கள், பிறந்த குழந்தையுடன் டிக் டாக் வீடியோவில் நடனமாடிய அதை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார்.இவர்கள் பதிவிட்ட இந்த வீடியோ வைரல் ஆகியது. ஆனால் நல்ல விதத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த குழந்தையை தூக்கி நடனமாடியுள்ள சம்பவம்

பிறந்த குழந்தையை தூக்கி நடனமாடியுள்ள சம்பவம்

கவனத்துடன் வேலை பார்க்க வேண்டிய செவிலியர்களே பிறந்த குழந்தையை தூக்கி நடனமாடியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.டிக் டாக் பயனர்கள் முதல் பொது மக்களின் வரை அனைவரும் இவர்களின் செயலிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

4 செவிலியருக்கும் கட்டாய விடுப்பு

4 செவிலியருக்கும் கட்டாய விடுப்பு

மருத்துவமனையின் முக்கிய பிரிவில் பணியாற்றும் இவர்கள் இப்படி அலட்சியமாகவும், வேலை செய்யும் நேரத்தில் கவனமாய் வேலை செய்யாமல், பணியாற்றுவதில் கவனம் இல்லாமல் டிக் தக் வீடியோ செய்ததற்காக இந்த வீடியோவில் இருந்த ரூபி ரே, டபாஸி பிஸ்வாஸ், ஸ்வப்னா பாலா, நந்தினி ராய் என்ற 4 செவிலியருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nurses used new born child in tik tok video from child care unit on duty time : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X