அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.!

|

இப்போது உள்ள 3டி தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் சிறந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது, குறிப்பாக ஸ்மார்ட்போன் முதல் ஓவியங்கள் வரை இதன் பங்கு மிகவும் அதிகம் என்று தான் கூறவேண்டும். மேலும் உலகின் பல
நாடுகளில் 64-க்கும் மேற்பட்ட ஓவிய கண்காட்சிகளை நடத்தியவர் தான்; ஏ.பி.ஸ்ரீதர். தமிழகத்தை சேர்ந்த ஏ.பி.ஸ்ரீதர் கலத்துறை மற்றும் தொழில்நுட்பம் மீது கொண்ட அதீத ஈர்ப்பினால் பள்ளி படிக்கும் போதே ஓவிய கலைஞராக
மாறினார்.

4000 கேமராக்களை சேகரித்துள்ளார்

4000 கேமராக்களை சேகரித்துள்ளார்

பின்பு ஓவியத்தின் மீதான அதிக காதலினால் பலரிடம் பணிபுரிந்து அதன் நுணுக்கங்களை கற்றறிந்தார், குறிப்பாக இவின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட 3டி ஓவியங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்து வருகின்றன என்று தான்
கூறவேண்டும். அதுமட்டுமின்றி, அரியவகை கேமராக்களை சேகரிப்பதிலும் ஈடுபட்டு வரும் ஏ.பி.ஸ்ரீதர் கிட்டத்தட்ட 4000 கேமராக்களை சேகரித்துள்ளார்.

இத்தாலி தூதரகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது

இத்தாலி தூதரகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது

மேலும் ஸ்ரீதர் அவர்களிக் கலைத்திறனை பாரட்டும் வகையில் கடந்த ஆண்டு இத்தாலிய தூதரகமும், இந்திய கலாச்சார மையமும் இணைந்து "The Cadent Coalition" என்னும் தலைப்பில் புது டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது. பின்பு "க்ளிக் ஆர்ட் மியூசியம்" என்ற ஒன்றை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்தது இவர்தான்.

பார்ப்போர் ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும்

பார்ப்போர் ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும்

ஸ்ரீதரின் கற்பனை வளத்தினாலும் கைவண்ணத்தினாலும் உருவான கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம், லைவ் ஆர்ட் மியூசியம் போன்றவை பார்ப்போர் ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும்.

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் "அந்த" சிக்கல் இருக்காது.!

மெழுகுசிலை

மெழுகுசிலை

மேலும் இவர் கலைத்திறனை மெழுகுசிலை வடிவமைப்பதில் வெளிப்படுத்தினார், இதுவரை அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோணி, ஜாக்கி சான், அர்னாடு என பல பிரபலங்களை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

 அழகிய ஓவியத்தால் அலங்கரித்தார்

அழகிய ஓவியத்தால் அலங்கரித்தார்

அறிவியல் ஆசிரியர், அணு விஞ்ஞானி, குடியரசுத் தலைவர்,கனவு நாயகன் என பன்முகங்கள் கொண்டவர் ஏபிஜே அப்துல் கலாமின் மணிமண்டபத்தை சிறந்த 3டி தொழில்நுட்ப வசதியுடன், அழகிய ஓவியத்தால் அலங்கரித்தார் ஸ்ரீதர்.

பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.! சர்ச்சையில் சிக்கியது.!பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.! சர்ச்சையில் சிக்கியது.!

 கமல்ஹாசன் வீடு

கமல்ஹாசன் வீடு

பினபு உலக நாயகன் கமல்ஹாசன் வீடு இவரது ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கு, ஜல்லிக்கட்டு, சிரியாபோர் உள்ளிட்ட நிகழ்வுகளை கண்முன் ஓவியமாக கொண்டுவந்தவர் இவர் பலரின் மனதை உருக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் ஸ்டார்டிரக்-ன் ஸ்டார்ப்லீட் லோகோ: விஞ்ஞானிகள் வியப்பு!செவ்வாயில் ஸ்டார்டிரக்-ன் ஸ்டார்ப்லீட் லோகோ: விஞ்ஞானிகள் வியப்பு!

ஒரு முயற்சியில் ஈடுபட்டால் இலக்கை அடையலாம்

ஒரு முயற்சியில் ஈடுபட்டால் இலக்கை அடையலாம்

குறிப்பாக இவரின் ஓவியத்திற்கு திரைத்தறையினரும் அடிமையாகினர், ஓவியம் தவிர்த்து திரைத்துறையிலும் முத்திரை பதித்து வரும் இவர், முழுவதுமாக ஒரு முயற்சியில் ஈடுபட்டால் இலக்கை அடையலாம் என்று தெளிவாக கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
nuclear-scientist-abdul-kalam-mani-mandapam-3d-drawing : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X