Home
Social media

சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க இயலாது: நித்யானந்தா.!

நித்யானந்தா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பும் நாட்டில் வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் பலவிதமான நகைச்சுவை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி விடுகின்றனர்.

எனும் தனிநாட்டை

மேலும் நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழந்து வருகிறது. முன்பு கூறியதுபோல் தினமும் சமூக வலைதளங்களில் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதிபர் குமார் மற்றும் திருச்சியை சேர்ந்த சாரதாஸ்

இந்த நிலையில் கைலாசா நாட்டின் பொருளாதர மேம்பாடு அறிவிப்பு ,கைலாசா நாட்டிற்கான நாணயங்கள் மற்றும் பணத்தை விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட்டார். அதனைதொடர்ந்து கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதிகோரி மதுரை டெம்பிள்சிட்டி ஹோட்டல் நிறுவனர் குமார் என்பவர் கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு பதில் கூறிய நித்யானந்தா மதுரை ஹோட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சியை சேர்ந்த சாரதாஸ் ஜவுளிகடை அதிபர் ஆகியோர் தங்களது தொழில்களை கைலாசாவில் தொடங்கமுன்னுரிமை அளிக்க சன்னியாசிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ளிக்கப்படும் என்றும், தான்

மேலும் கைலாசாவில் வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தான் இறந்தபிறகு தனது சொத்தை மதுரை திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அளிக்க உயில் ஏழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசைப்பட்டு நான் மதுரை

குறிப்பாக சொத்துக்கு ஆசைப்பட்டு நான் மதுரை ஆதினத்திற்கு வரவில்லை என்றும், மீனாட்சியம்மன் வாழ்ந்த மதுரையில் உயிரிழக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்பு மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்காரர்கள் நான் உயிரோடு இருக்க வேண்டும் எனவும் பிராத்தனை செய்துவருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

நித்யானந்தா கூறியது என்னவென்றால்,

பின்பு நித்யானந்தா கூறியது என்னவென்றால், நான் திருவண்ணமாலை மலைஅடிவாரத்தில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா வைத்து தரிசனம் செய்து வருகிறேன் என்றும், ஆனால் சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசாவை கண்டுபிடிக்கலாம் என்று முயற்சிக்க வேண்டாம்,அப்படி கண்டுபிடிக்க இயலாது எனவும் கூறியுள்ளார்.

யிரிழந்த பின்பு தனது

மேலும் நித்யானந்தா உயிரிழந்த பின்பு தனது உடலை திருவண்ணாமலை மலையையும், மீனாட்சியம்மன் கோவிலையும் சுற்றிக் கொண்டுவந்த பின்னரே புதைக்க வேண்டும். கைலாசா நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் நிச்சியமாக தொழில் துவங்க வேண்டுகோள் விடுத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறினார்.

 பல்வேறு

இந்திய பிரஜை ஒருவர் தனி நாடு அறிவித்து, பின்பு நாணயங்கள், பொருளதார அறிவிப்பை வெளியிட்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவரும் நிலையில் தினசரி நேரலையில் தோன்றும் நிலையில்கூட இந்திய அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என பல்வேறு மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
No One Can Find Kailash And Me With My Web Camera Signal Says Nithyananda: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X