வைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்!
தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிர்த்து ஆடுகிறது. மக்கள் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை இங்கு நிலவி வருகிறது. சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

இதேபோல் தண்ணீர் பஞ்சத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சென்னை, அம்பத்தூரில் நடந்த திருமண விழாவில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். தற்பொழுது அவர்கள் செய்த விஷயம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.
அம்பத்தூரில் நடைபெற்ற திருமணம் விழாவில், மணமகன் பாலாஜி மற்றும் மணமகள் ஜனனி இருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் எனத் திருமணத்திற்கு வந்த பலரும் தண்ணீர் கோன்களைப் பரிசாகத் திருமண ஜோடிக்கு வழங்கியுள்ளனர்.

குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் படி உறவினட்டர்கள் மற்றும் நண்பர்கள் வேண்டுகோள்விடுத்து, மணமக்களை வாழ்த்தி விடைபெற்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்து நடக்கவிருக்கும் திருமணங்களுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்


Click it and Unblock the Notifications