கொரோனாவை இப்படி கூட அழிக்கலாமா? இப்படி ஒரு ஐடியாவா சார்?

|

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள் இன்னும் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள வங்கியில் நடந்த ஒரு சம்பவம் சமூகவலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

ட்விட்டர் பக்கத்தில் வைரல்

ட்விட்டர் பக்கத்தில் வைரல்

குஜராத் மாநிலத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடாவின் வங்கி ஊழியர் ஒருவர் காசோலையை அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்துள்ளார். இதை வீடியோ பதிவாக பதிவிட்டு வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார். ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அப்பதிவை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸை இப்படியும் கூட அழிக்கமுடியுமா என்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

முழு பாதுகாப்பு அம்சங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்

முழு பாதுகாப்பு அம்சங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்

இந்த வீடியோவில் வங்கி ஊழியர் ஒருவர் மக்களிடமிருந்து காசோலையை ஒரு ஜன்னல் வழியாக வாங்கி காசாளரிடம் ஒப்படைப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. முழு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியில் இருக்கும் காசாளர் முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்திருக்கிறார். மக்களிடமிருந்து வாங்கும் காசோலையையே ஒரு இடுக்கியை பயன்படுத்தி கைபடாமல் கையாளுகிறார். பார்ப்பதற்கே சற்று வினோதமாகத் தான் தெரிகிறது.

BSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு! 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்!BSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு! 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்!

பாராட்ட வேண்டும்

பாராட்ட வேண்டும்

வாங்கிய காசோலையை தனது மேஜையில் வைத்து, பின்னர் வைரஸை கிருமி நீக்கம் செய்யும் முயற்சியில் அதன் மீது ஒரு நீராவி அயன் பாக்ஸ்-யை வைத்து தேய்கிக்கிறார். இதை, ஆனந்த் மஹிந்திரா பதிவு செய்து இந்த காசாளரின் நுட்பம் பயனுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவரது விசித்திரமான படைப்பாற்றலுக்கு நீங்கள் அவரை பாராட்ட வேண்டும்" என்று கூறி பகிர்ந்துள்ளார்.

254.4K பார்வைகளைப் பெற்ற வீடியோ

இணையத்தில் இந்த பதிவை இதுவரை சுமார் 254.4K பார்வைகளைப் பெற்றுள்ளது. அதேபோல் மக்களின் கருது பற்றி இதுவரை சுமார் 800 கமெண்ட்கள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவை இதுவரை சுமார் 23.6K மக்கள் லைக் செய்தும் உள்ளனர். வேடிக்கையான இந்த வீடியோ கிளிப்பை 'தேசி ஜுகாத்' என்று பெயரிட்டனர். சிலர் இதுயெல்லாம் உங்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றாது என்றும் தெரிவித்துளள்னர்.

Best Mobiles in India

English summary
New Method To Clean Corona Spread Cashiers Idea Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X