இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச "வாய்ஸ் கால்" செய்யலாம்!

Posted By: Staff
இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச

ஃபேஸ்புக் புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அப்ளிகேசன் மூலமாக இலவச "வாய்ஸ் கால்" செய்யலாம். இதற்கான வேலைகளில் ஃபேஸ்புக் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுநாள்வரை வீடியோ சாட் வசதியின் மூலமாக நண்பர்களுடன் பேசிவந்த நாம், இனிமேல் இந்த சமூக வலைத்தளத்திலிருந்து நண்பர்களுடன் "தொலைபேசவும்" முடியும். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புடைய பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த சேவையானது தற்பொழுது கனடா நாட்டிலுள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களால் மட்டுமே அனுபவிக்க முடியும். விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.

 

இந்த இணையத்தில் "வாய்ஸ் கால்" செய்யும் முறையை VoIP என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த முறை மூலமாக எந்த ஃபேஸ்புக் நண்பருடனும் இலவசமாகவே பேசமுடியும்.

 

டெர்மினேட்டர் - அதிநவீன செயற்கை கைகள்

 

ஆனால் டெக்கிரன்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஃபேஸ்புக்கின் இந்த புதிய சேவைக்கு பணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இது தொழில்நுட்பரீதியில் இலவசம் இல்லை. உங்கள் தொலைபேசி எண்ணின் கட்டண அளவுகளை பொறுத்தே அமையும்." என்று தெரிவித்துள்ளது.

 

ஆகவே ஃபேஸ்புக், இலவசமாக வழங்குகிறதா அல்லது உள்குத்து ஏதும் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot