வெட்டி பந்தாவுக்காக ஒரே ஒரு FB போஸ்ட்! வீடு தேடி வந்து கைது செய்த காவல்துறை! என்ன செய்தார் தெரியுமா?

|

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் வீட்டில் இருப்பது போர் அடித்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரே ஒரு போஸ்ட்டை படு சீன்னாக பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவிற்கு அவரின் நண்பர்கள் லைக் கொடுத்திருந்தாலும், அவரின் பதிவை பார்த்த காவல்துறை கடுப்பானது. உடனடியாக இளைஞரை கைது செய்யுமாறு காவல்துறை கண்காணிப்பாளரும் உத்தரவிட அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே ஒரு போஸ்டில் பிரபலம்

ஒரே ஒரு போஸ்டில் பிரபலம்

ஒரே ஒரு போஸ்டில் பிரபலம் ஆகிவிடலாம் என்று நினைத்து தான் இவர் தனது போஸ்டை பதிவு செய்திருக்கிறார். ஆனால், இவர் தற்பொழுது இவர் பிரபலமானது வெறும் வழியிளாக உள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் அந்த பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் பணிபுரிந்து வருகிறார். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்ட இவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரிய சைஸ் வாள்

பெரிய சைஸ் வாள்

அதற்கு காரணம், சங்கர் அண்மையில் அவரின் வீட்டிலிருந்து ஒரு பெரிய சைஸ் வாள் ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதை வைத்து கொண்டு சும்மா இருந்திருந்தால் யாருக்கும் பிரச்சனையே இருந்திருக்காது. சங்கர் அந்த வாளை கையில் பிடித்து நன்றாக சுழட்டி மிரட்டுவது போல் படமெடுத்து அதை பேஸ்புக்கிலும் பதிவிட்டிருக்கிறார். அதையும் அவர் சினமா பணியில் ஓவர் சீனாக செய்திருக்கிறார்.

சினிமா பணியில் பாடலுடன் போஸ்

சினிமா பணியில் பாடலுடன் போஸ்

திரைப்படங்களில் வருவது போன்று வாளை முதுகிலிருந்து எடுத்துக் காட்டுவதும், அதனைச் சுற்றுவதும், கையில் உள்ள வாளை வைத்து மிரட்டுவது போன்ற காட்சிகளைத் தந்து ஸ்மார்ட்போனில் படமெடுத்து அதற்கு மாஸான பின்னணி இசை எல்லாம் சேர்த்து சினிமா பணியில் பாடலுடன் அதனை பேஸ்புக்கில் பதிவேற்றி இருக்கிறார். இந்த வீடியோ நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனின் கவனத்திற்குச் சென்றது.

ஐடி சட்டத்தின்படி கைது

ஐடி சட்டத்தின்படி கைது

சங்கரின் கட்டம் சரியாக வேலை செய்யவில்லை, விடியோவை பார்த்த நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உடனடியாக சங்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் சங்கரின் விபரங்களைச் சேகரித்து அவரை நேரில் சென்று ஐடி சட்டத்தின்படி கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தியுள்ளார்.

இறுதியில் பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலை

இறுதியில் பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலை

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் காரணத்தினால் இது போன்ற சம்பவங்களை காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சமுக வலைத்தளம் வழியாக ஆயுதத்தைக் காட்டியதால் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சங்கர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nellai Youth Guy Got Arrested For Posing Videos With Weapons On Facebook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X