பிரபஞ்சத்தின் ஆச்சரியம்: நம்ப முடியா வியக்கத்தக்க புகைப்படங்கள்- பரிசாக வெளியிட்ட நாசா!

|

நாசா 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சா ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்டிஎஸ்சிஐ என்ற விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் என்ற சுயாதீன நிறுவனத்தை நாசா அமைத்தது. இது கட்டப்பட இருக்கும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கிக்கான அறிவியல் நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

ஜான்சா ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வளாகம்

ஜான்சா ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வளாகம்

நாசா 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சா ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்டிஎஸ்சிஐ என்ற விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் என்ற சுயாதீன நிறுவனத்தை நாசா அமைத்தது. இது கட்டப்பட இருக்கும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கிக்கான அறிவியல் நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

விண்வெளி உலகின் சில வியக்கத்தக்க புகைப்படங்கள்

விண்வெளி உலகின் சில வியக்கத்தக்க புகைப்படங்கள்

இதன் 40-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக விண்வெளி உலகின் சில வியக்கத்தக்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. பொதுவாக பரிசு வழங்குவது என்பதில் ஆச்சரியமும் அதற்கான முணைப்பும் பெரிதும் பேசப்படும். நாசா தற்போது வழங்கியுள்ள பரிசானது அனைவரையும் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம்.

நம்ப முடியாத புகைப்படங்கள்

நம்ப முடியாத புகைப்படங்கள்

40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொலைநோக்கி நிறுவனம் மில்லியன் கணக்கான காரணிகளை செயலாக்கி இருக்கிறது. இதில் சில வியக்கத்தக்க நம்ப முடியாத புகைப்படங்களை நிறுவனம் டுவிட் செய்திருக்கிறது.

நாசா அற்புத பரிசு

ஒருவரின் பிறந்தநாளுக்கு பரிசு வழங்குவது என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும். சில பரிசுகள் நம்ப முடியாத வகையில் பிரமிக்க வைக்கும் விதமாக இருக்கும். சமீபத்தில் கூட மனைவி பிறந்தநாளுக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளித்த கணவர் குறித்து கேள்வி பட்டிருப்போம். அதன்படி தற்போது விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் 40-வது பிறந்த நாளை கொண்டாட விண்வெளி உலகின் சில நம்பமுடியாத புகைப்படங்களை டுவிட் செய்துள்ளது. இதன்மூலம் நாசா அற்புத பரிசு வழங்குநர் பிரிவில் இணைந்துள்ளது. நாசா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் அற்புதமான வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.

சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம்

சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம்

40 ஆண்டுகளுக்கு முன்பு, விரைவில் கட்டப்படவிருக்கும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கிக்கான அறிவியல் நடவடிக்கைகளை இயக்குவதற்காக ஜான்சா ஹாப்கின்ஸ் [ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்] வளாகத்தில் ஒரு சுயாதீன நிறுவனத்தை நாசா நிறுவியது. இந்த நிறுவனம் 1.5 மில்லியனுக்கும் அதிகமான அவதானிப்புகளை செயலாக்கியுள்ளது.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

நாசா பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. இந்த நம்ப முடியாத புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இவை அனைத்தும் விண்வெளி தொலைநோக்கியில் எடுத்த நம்ப முடியாத புகைப்படங்கள் ஆகும். இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

முதன்முறையாக வேறு கோளில் ஆக்சிஜன்

முதன்முறையாக வேறு கோளில் ஆக்சிஜன்

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் வாயுவை தயாரித்து நாசா அனுப்பி இருக்கிறது. வேறு கோளில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு அனுப்பியது இதுவே முதல்முறையாகும். அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் பல பணிகளை செவ்வாய் கிரகத்தில் மேற்கொண்டு வருகிறது.

பெர்சவரன்ஸ் ரோவர்

பெர்சவரன்ஸ் ரோவர்

கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன சிறிய ஹெலிகாப்டர்

அதிநவீன சிறிய ஹெலிகாப்டர்

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் கடந்த வாரங்களில் இருமுறை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்தது.

Best Mobiles in India

English summary
Nasa Shares Amazing pics to Celebrate 40 Years of Hubble Space Telescope

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X