Home
Social media

வைரல்: பூமியின் அழகான புகைப்படத்தை வெளியிட்ட நாசா விண்வெளி வீரர்!

பூமியில் பல விஷயங்கள் அழகானவையாக இருக்கிறது, பூமியில் அழகாய் இருக்கும் இயற்கை காட்சிகளை பார்த்தாலே மனதிற்கு இதமாக தான் இருக்கும். இப்படி அழகிய எழில் சூழ்ந்த பூமி கிரகத்தை முழுமையாக அதன் அழகான தோற்றத்தில் காண நமக்கு இப்பொழுது ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. பூமியின் மிக அழகான நெருக்கமான விண்வெளி புகைப்படம் தான் இது.

விண்வெளி ஆராய்ச்சி

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல விண்வெளி அமைப்புகள் பல ஆண்டுகளாக பலவிதமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக விண்ணில் பல செயற்கைகோள்களை இந்த அமைப்புகள் விண்ணில் ஏவியுள்ளது. அப்படி விண்வெளியில் சுற்றி திரியும் செயற்கைகோள்கள் அவ்வப்போது பூமியின் புகைப்படங்களை கிளிக் செய்து பூமிக்கு அனுப்பும்.

விண்வெளி வீரர்கள்

அந்த வரிசையில், அதிகளவிலான புகைப்படங்களை நாசா மற்றும் பிற அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் விண்வெளியிலிருந்து பூமியின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியிடப்படுகிறது. இதில் சில எதிர்பாராத தருணங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களே படம்பிடித்திருப்பார்கள். இந்த வகையான புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகிவிடும்.

அதேபோல், நாசா செயற்கைக்கோள்களும் அவ்வப்போது பல புகைப்படங்களை கிளிக் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பூமியின் மேற்பரப்பிற்கு மிக அருகாமையில் இருந்து ஒரு புகைப்படம் கிளிக் செய்யப்பட்டுள்ளது. இந்த அழகான புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இதுவரை சுமார் 20,000 நபர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.

இதோ..! நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்

பூமியின் இந்த புதிய புகைப்படம் சுமார் 2,300 முறைக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை விண்வெளி வீரர் டாக் ஹார்லி என்பவர் வெளியிட்டுள்ளார். 'இதோ..! நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்' என்ற கேப்ஷன் உடன் இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.பூமியின் கடல் பரப்பை அழகாக நீல நிறத்தில் காட்டியுள்ளது. பூமியின் அழகே அதன் நீர்வளம் கொண்ட கடல் பகுதிகள் தான், இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
NASA Astronaut Pilot Of Shuttle Missions STS-127 Shared Beautiful Picture Of Our Earth Went Viral : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X