இதுபோன்ற மின்னல் தாக்குதலை இந்தக் கோணத்தில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை!

|

நீங்கள் பல மின்னல் தாக்குதல்களைப் பார்த்திருக்கலாம், ஆனால் இதுபோன்ற எதையும் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நிச்சயமாகக் கூறமுடியும்.ஏனென்றால், இந்த பதிவில் நீங்கள் பார்க்கப் போகும் மின்னல் தாக்குதல் பூமியிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல, வழக்கத்திற்கு மாறாக விண்வெளியிலிருந்து பூமியில் நிகழும் மின்னல் தாக்குதலை நாசா விண்வெளி வீரர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர் பாப் பெஹன்கென்(Bob Behnken), விண்வெளியிலிருந்து பூமியில் நிகழும் மின்னல்கள் பற்றிய ஒரு மெய்மறக்கும் காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்த அற்புதமான வீடியோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

பாப் பெஹன்கென்

பாப் பெஹன்கென் தனது டிவிட்டரில் பகிர்ந்த வீடியோ, விண்வெளியிலிருந்து பார்த்தபடி பூமிக்கு மேலே ஒரு இருண்ட மேக மூடியைக் காட்டுகிறது. பூமியிலிருந்து 400 கி.மீ தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ கிளிப், மின்னலின் வயலட் ஃப்ளாஷ்கள் இடைவெளியில் மேகங்களை ஒளிரச் செய்வதைக் காட்டுகிறது, இது மைக்ரோபிளாக்கிங் மேடையில் பலரையும் "அற்புதமான" காட்சி என்று வர்ணிக்கவைத்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா டிவி பட்டியல்! அடேங்கப்பா இவ்வளவு பிரண்டா இருக்கு?இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா டிவி பட்டியல்! அடேங்கப்பா இவ்வளவு பிரண்டா இருக்கு?

விண்வெளியிலிருந்து மின்னல்

"விண்வெளியிலிருந்து மின்னல், வயலட் விளிம்புகள் மெய்மறக்க வைக்கின்றன" என்ற தலைப்பில் பாப் பெஹன்கென் இந்த ஒன்பது விநாடி வீடியோவைப் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட சில மணிநேரத்திலே சுமார் 131.1K பார்வைகளையும், ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் சேகரித்துள்ளது, பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்ததற்கு விண்வெளி வீரருக்கு கமெண்டில் நன்றி தெரிவித்துள்ளனர்.

மே மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸின் முதல் குழு விமானத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணித்த இரண்டு விண்வெளி வீரர்களில் பாப் பெஹன்கென் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நண்பரும் சகாவுமான டக் ஹர்லியுடன் அவர் மே மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். இருவரும் விண்வெளியிலிருந்து பூமியின் பல அற்புதமான காட்சிகளைப் பகிர்ந்துள்ளனர்.

உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

ஸ்பிளாஸ் டவுன்

இந்த மாத தொடக்கத்தில், பாப் பெஹன்கென் வால்மீன் நியோவிஸின் அழகிய காட்சிகளையும் பகிர்ந்து கொண்டார், ஏனெனில் இது பூமியின் வளைவுக்கு அருகில் ஒளிரும் புள்ளியாகத் தோன்றியது. செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி படி, இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி பூமிக்கு புறப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஸ்பிளாஸ் டவுன் ஆகஸ்ட் 2ம் தேதி நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Astronaut Captured In Stunning Video Of Lightning As Seen From Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X