எதற்கு கூடுதலாக ஒரு ஹூ லேஸ் துளை? மர்மம் விலகியது!
நாம் வழக்கமாக ஷூலேஸ் கட்டும் போது கடைசியாக நுழைக்கும் துளையை தாண்டி மற்றொரு துளை இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் அவை வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்லை.

கடினமான நிலப்பரப்பில் நடக்கும்போது மனிதர்களின் காலில் கொப்புளங்கள் வருகின்றன. இந்த எரிச்சலூட்டும் தோல் பிரச்சினைக்கு முக்கிய காரணம், அதிக உணர்திறன் வாய்ந்த தோல் மற்றும் ஷூவின் பேப்ரிக் துணியில் கால்கள் தொடர்ந்து உராய்ந்துகொண்டிருப்பது தான். கூடுதல் லேஸ் துளைகளில் லேஸ் லாக் அல்லது ஹீல் லாக் என ஹூ லேஸை கட்டுவதன் மூலம் இந்த கொப்புளங்களை எளிதில் தவிர்க்கலாம்.

இந்த வலுவான பிணைப்பு ஹூ லேஸ்க்கு இடையில் கூடுதல் உராய்வை உருவாக்குகிறது. இதன் மூலம் ஷூலேஸ்கள் அனைத்தையும் இறுக்கிக் கொள்ள வேண்டிய அவசியமின்றி ஷூ மிக அழகாகவும் இறுக்கமாகவும் வைக்கப்பட்டுள்ளது. எனவே இது கால்விரல்கள் மற்றும் குதிகால் ஷூவின் முனைகளில் அடிபடுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக காலில் கொப்புளங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.


Click it and Unblock the Notifications








