பூமிக்கு வந்துட்டாங்க., இந்த ஆதாரம் போதுமா: கேமராவில் பதிவான ஏலியன் உருவம்?- ஆனா அங்க என்ன பண்றாங்க!

|

டெக்சாஸ்-ல் உள்ள அமரில்லோ நகரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அது வித்தியாசமான உருவத்துடன் இரண்டு கால்களில் நடக்கும் மர்மமான உயிரினம் குறித்த புகைப்படம் ஆகும். அமரில்லோ நகரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் கலவையான பதிலை அளித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம உயிரினம்

கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம உயிரினம்

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு மர்ம உயிரினம் சிக்கியுள்ளது. இதையடுத்து டெக்ஸாசின் அமரில்லோ நகரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், கேமராவில் பதிவான இந்த உயிரினத்தின் புகைப்படம் பகிரப்பட்டது. மே 21 அதிகாலை 1:25 மணியளவில் அமரில்லோ மிருகக்காட்சி சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இந்த உயரினத்தின் படம் பதிவாகியுள்ளதாக அந்த பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத அமரில்லோ பொருள்

அடையாளம் தெரியாத அமரில்லோ பொருள்

"விசித்திரமான தொப்பி அணிந்த யாரும் இரவில் நடக்க விரும்புகிறாரோ? மே 21 அதிகாலை 1:25 மணியளவில் அமரில்லோ மிருகக்காட்சி சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இந்த படம் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத இந்த அமரில்லோ பொருள் என்னவாக இருக்கும்? இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் உள்ளதா?" என்ற தலைப்பில் அமரில்லோ நகரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

வித்தயாசமான தோற்றத்துடன் இரண்டு கால்கள்

பதிவிடப்பட்டுள்ள புகைப்படத்தில் மிருகக்காட்சி சாலையின் வேலிக்கு வெளியே இருட்டில் சந்தேகத்திற்கு இடமான தோற்றத்தில் ஒரு உருவம் காணப்படுகிறது. சற்று உயரமாக வித்தயாசமான தோற்றத்துடன் இரண்டு கால்களில் நிற்கிறது, அதன் காதுகள் வழக்கத்திற்கு மாறாக கூரானதாக இருக்கிறது.

இந்த உயிரனம் என்ன என்பது அடையாளம் காண முடியாத காரணத்தால், அடையாளம் காணப்படாத அமரில்லோ பொருள் (UAO- Unidentified Amarillo Object) என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நகர வாசிகள் இந்த உயிரனம் குறித்து ஏதேனும் அறிந்துள்ளார்களா அல்லது வேறு யாருக்கும் இந்த உயிரினம் குறித்து தெரியுமா என்பதை அறியும் நோக்கில் அமரில்லோ நகரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை

எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை

சிட்டி ஆஃப் அமரில்லோ உயிரியல் பூங்காவின் இயக்குனர் மைக்கேல் கஷூபா இதுகுறித்து கூறுகையில், மிருகக்காட்சி சாலைக்கு வெளியே இந்த உயிரினம் காணப்பட்டதாகவும், மிருகக்காட்சி வளாகத்திற்குள் நுழைய இந்த உயிரினம் முயற்சி செய்ததற்கான எந்த ஆதாரமும் பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் உயிரினம் பதிவாகியுள்ள இடத்தில் எந்த விதமான அழிவோ அல்லது குற்றச் செயலோ நடந்ததற்கான அறிகுறிகள் காணப்படவில்லை, அதேபோல் மிருகக்காட்சிசாலையில் உள்ள எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

பேஸ்புக்கில் பதிவான இந்த புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். இது இருட்டில் பதுங்கியிருக்கும் வேற்றுகிரகவாசி அல்ல என நம்புவதாக ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் "சிங்கத்தோல் அணிந்த நபர் போல் தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார். இது நரி அல்லது மான் போன்ற ஏதோ விலங்காக இருக்கலாம் என சிலரும் விலங்குகளால் முழங்கால்களை இப்படி வளைக்க முடியாது என சிலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

வானத்தில் தோன்றிய வித்தியாசமான காட்சி

வானத்தில் தோன்றிய வித்தியாசமான காட்சி

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்காவின் அலாஸ்கா லேசி எனும் மலைப் பகுதியில் மேகம் கீழே விழுவது போல் வானத்தில் தோன்றிய வித்தியாசமான காட்சியை பொதுமக்கள் சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்தனர். புகைப்படங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூகவலைதளங்களில் வைரலானது. UFO அதாவது Unidentified Flying Object (அடையாளம் காணப்படாத பொருள்) எனப்படும் ஏலியன்களின் விண்வெளி கப்பல் பூமிக்கு வந்ததால் ஏற்பட்ட நிகழ்வு தான் இது என அப்பகுதி மக்கள் பலர் நம்பியதோடு அதே தலைப்பில் புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டனர்.

மீட்புக் குழு அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், இந்த நிகழ்வு நடந்த சமயத்தில் குறிப்பிடத்தக்க அளவு கொண்ட வணிக ஜெட் அங்கு பறந்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். ஜெட் பயணித்தால் அதன் பாதை பளீர் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் என்பது அறிந்ததே, சூரிய வெளிச்சத்தின் காரணமாக கூடுதல் வெளிச்சத்தோடு அலாஸ்கா பகுதியில் இந்த காட்சி தோன்றி இருக்கிறது என குறிப்பிட்டனர்.

Source: news18.com

Best Mobiles in India

English summary
Mysterious Creature Caught on Texas Zoo surveillance Camera: Is this Aliens

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X