டுவிட்டரில் தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்: கண்ணாமூச்சி ரே ரே!

|

நடிகர் அஜித் என்றாலே தமிழ்நாட்டில் தனி மாஸ் தான். இவரை போலவே ரசிகர்களும் கெத்து தான். ஒவ்வொரு படத்திலும் அஜித் போன்ற ரசிகர்களும் தனக்கென தனி கெட்டப்பில் வலம் வருகின்றனர். நடிகர் அஜித்தின் பேச்சும், பணிவும் கெத்தும் இருப்பதால் நடிகைளின் மத்தியிலும் தனக்கென்று பெயர் உண்டு.

டுவிட்டரில் தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்: கண்ணாமூச்சி ரே ரே!

தல என்றால் தமிழ்நாடே ஆடும் அளவுக்கு நசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. அதிலும் பள்ளி, கல்லூரி, இலத்தரசிகளும் நடிகர் அஜீத்தை தனது காதலனாகவே எண்ணி வருகின்றனர். அந்த அளவுக்கு ரசிகைகளும் அஜித் என்ற பெயர் மீது தீவிர வெறிபிடித்துள்ளனர்.

அஜித்தின் முதல் படம்:

அஜித்தின் முதல் படம்:

1993ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வெளியானது அமராவது திரைப்படம். இந்த படத்தில் தான் நடிகர் அஜித் அறிமுக வீரராக நடித்துள்ளார். இந்த படத்தை செல்வா இயக்கியிருந்தார். தற்போது இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அவரின் யதார்த்தமான நடிப்பும் துடிப்பும் வேகமும் இளைஞர்களை கவர்ந்தது. இதனால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார்.

எந்த பின்னணியும் இல்லாதவர்:

எந்த பின்னணியும் இல்லாதவர்:

நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும், அவருக்கு எந்த ஒரு பின்னணியும் இல்லை. சினிவில் ஹீரோ வாய்ப்பை பெற பல இக்கட்டான சூழ்நிலையை கடந்தாலும் மனம் சோர்வு அடையாமல் மீண்டும் ஹீரோ ரோலை பெற்று நடித்தார் நடிகர் அஜித். அந்த அளவுக்கு கடின உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் அஜித்.

நடிகர் அஜித் வெற்றி படங்கள்:

நடிகர் அஜித் வெற்றி படங்கள்:

நடிகர் அஜித் வெற்றி படங்களாகவும் வசூல் சாதனையாக விளங்கிய படங்கள் ஆசை. 1995ம் ஆண்டு வெளியானது. காதல்கோட்டை, காதல்கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், வரலாறு, பில்லா, மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்கள் நடிகர் அஜித் வெற்றி படங்களாக அமைந்தது.

தோல்வி படங்கள்:

தோல்வி படங்கள்:

மைனர் மாப்பிள்ளை, நேசம், அசோகா, ரெட், ராஜா, ஆஞ்சநேயா, ஜனா, ஜி, திருப்பதி, ஏகன், அசல், ஆழ்வார், ஏகன், பில்லா 2 உள்ளிட்ட படங்கள் தோல்விபடமாக அமைந்தது. இதுவரை அஜித் நடித்த 58 படங்களில் 60 சதவீதம் தோல்வி படங்களாக அமைந்தன.

ரசிகர்கள்:

ரசிகர்கள்:

எந்த ஒரு நடிகருக்கும் வெற்றி படங்கள் தந்தால் தான் ரசிகரும் கூட வே இருப்பார்கள். ஆனால் நடிகர் அஜித் மட்டும் அப்படி இல்லை. ஏராளமான படங்கள் தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் ஆதரவும் எப்போதும் அஜித் இருந்தது. நடிகர் அஜித் கார் ரேஸில் அதிகம் அவர் கொண்டதால், தோல்வி படங்களின் போதும் கார் ரேஸில் தனி கவனம் செலுத்தி வந்தார். அதில் அவருக்கு விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சைகளும் செய்தாலும், நடிப்பிலும் கலக்கி வருகிறார்.

மனத்தில் தூக்கி சுமந்த ரசிகர்கள்:

மனத்தில் தூக்கி சுமந்த ரசிகர்கள்:

நடிகர் அஜித் நடித்த படங்கள் பெரிய வசூல் இல்லாமல் தோல்வி அடைந்தாலும், விபத்தில் அறுவை சிகிச்சை பெற்றாலும் அவரின் அனைத்து வலிகளையும் ரசிகர்கள் மனதில் தூக்கி சுமந்தனர். ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், தோல்விகளை கண்டு எப்போதும் அஞ்சியதில்லலை. மேலும் அவர்களின் குடும்பத்தின் மீதும் அக்கரை எடுத்து ரசிகர் மன்றத்தை கலைத்தார். அவரை அஜித் ரசிகர்கள் எப்போதும் தல என்று தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

டுவிட்டரில் தெறிக்கவிட்ட ரசிகர்கள்:

டுவிட்டரில் தெறிக்கவிட்ட ரசிகர்கள்:

நடிகர் அஜித் இன்று 26ம் ஆண்டில் கால் எடுத்து வைக்கிறார். இதையொட்டி அவரின் ரசிகர்கள் டுவிட்டரில் #26YrsOfUnparalleledAJITH என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் தெரிக்க விட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நீண்டநாள் நண்பனுக்கு வாழ்த்து என்று தெரிவித்துள்ளார். மேலும், உனக்கு என்னுடைய அன்பை தெரிவிக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடித்து, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவாய் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
My Dear Thala Ajith Trending Worldwide English Summary : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X