ஆயுசு கெட்டி:சிறுவனின் மீது கார் ஏற்றிய பெண்.! வைரல் திக், திக், திக் வீடியோ.!

மும்பை குடியிருப்பு அபார்ட்மெண்ட் பகுதி ஒன்றில் நடந்துள்ள ஒரு சம்பவத்தின் சிசிடிவி கேமரா வீடியோ, தற்பொழுது வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

|

சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் வைரல் வீடியோகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

டிக் டாக் வீடியோ பிரியர்கள் ஒரு புறம் சமூக வலைத்தளங்களை நிரப்பி வரும் நெட்டிசன்களுக்கு இடையே, உண்மையான சிசிடிவி காணொளிகளை ஆச்சிரியத்துடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

சிசிடிவி வீடியோ

சிசிடிவி வீடியோ

மும்பை குடியிருப்பு அபார்ட்மெண்ட் பகுதி ஒன்றில் நடந்துள்ள ஒரு சம்பவத்தின் சிசிடிவி கேமரா வீடியோ, தற்பொழுது வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் மேல் ஒரு பெண் கார்ரை ஏற்றி நிறுத்தாமல் சென்று விடுகிறார்.

திக் திக் திக்

திக் திக் திக்

வீடியோ பார்க்கும் அனைவர்க்கும் ஐயையோ என்று கத்தும் அளவிற்கு அந்த வீடியோ காட்சிகள் நமது நெஞ்சைப் பதறவைக்கிறது. ஆனால் சிறு நொடிகளில் அந்தப் பதட்டமான மனநிலை மாறிவிடுகிறது. அச்சிறுவன் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்கள் கூட இல்லாமல் காரின் அடியில் இருந்து எழுந்து ஓடிவிடுகிறான். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதங்களில் வைரல் ஆகி வருகிறது.

இப்படியா கார் ஓட்டுவது?

இப்படியா கார் ஓட்டுவது?

கார் அச்சிறுவன் மேல் ஏறி இறங்குவது கூட தெரியாமல் அந்தப் பெண் கரை ஓட்டுகிறார். உன்னிப்பாகக் கவனித்தால் அந்த காரின் இடது கதவு கூடச் சாத்தப்படவில்லை. அப்படி அந்தப் பெண்ணிற்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. அப்படி என்னதான் அவசரமாக இருந்தாலும் இப்படியா கார் ஓட்டுவது என்று பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமராகள் இன்றைய நிலையில் அனைத்துக் கொலை, கொள்ளை, விபத்து என்று அனைத்துக் குற்றங்களுக்கும் நேரடி சாட்சியாக இருக்கின்றது.காவல் துரையின் உண்மையான நண்பன் என்றால் அது சிசிடிவி கேமராகள் தான்.

Best Mobiles in India

English summary
Mumbai boy miraculously escapes after being run over by a car : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X