இன்ஸ்டாகிராமில் போட ஒரு செல்பீ போட்டோ எடுத்த இளம்பெண்: ஆனா அதுல இப்படியொரு சிக்கல் இருக்கும்னு நினைக்கல.!
உலகம் முழுவதும் மக்கள் அதிக நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சில சமூகவலைத்தளங்கள் முக்கிய செய்திகள், தகவல்கள் என அனைத்தையும் பார்க்க உதவி செய்கிறது என்று தான் கூறவேண்டும்.

அதேபோல் இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது.

இந்நிலையில் ஒரு செல்பீ புகைப்படம் இளம்பெண் ஒருவரின் மொத்த தூக்கத்தையும் கலைத்து விட்டது என்றே கூறலாம். thesun.co.uk இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, இங்கிலாந்தில் Coventry எனும் இடத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் Rebecca Glassbrow. மேலும் இவரது தோழியும் அவரது வீட்டின் கீழே வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் Rebecca Glassbrow தோழிகள் சிலர் பல நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த நிலையில் அவர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்துள்ளார்கள். பின்னர் தோழிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செல்பீ புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அதன்பின்னர் தோழிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த செல்பீ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடலாம் என்று Rebecca பார்த்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த புகைப்படத்திலல் எட்டாவதாக ஒரு இளம்பெண் நீண்ட கருமை நிற கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு நிற்பதைக் கண்ட Rebecca அதிர்ச்சியாகியுள்ளார்.

மேலும் ஏற்கனவே அந்த குடியிருப்பிலுள்ள குளியலறைத் தொட்டி ஒன்றில் ஒருவர் இறந்துபோனதாக கூறப்படுகிறது. பின்பு இப்படி ஒரு பெண்ணின் முகத்தைப் புகைப்படத்தில் கண்டதிலிருந்து Rebeccaவுக்கு தூக்கமே வரவில்லை. பின்பு அவர் இருக்கும் வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவர் நம்புகிறார்.

அந்த வீட்டில் அவ்வப்போது ஏதாவது சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும், ஆனால் அது அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எழுப்பும் சத்தம் என்று அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் Rebecca. ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்தபோது அது அக்கம் பக்கத்து வீடுகளில் வரும் சத்தம்தானா என்பது சந்தேகமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார் Rebecca.
News Source: thesun.co.uk


Click it and Unblock the Notifications