Home
Social media

யூடியூப் வீடியோவை பார்த்து தன் குழந்தையை கொலை செய்த தாய்: வாட்ஸ் ஆப் சேட்டிங் விபரீதம்.!

கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு வாட்ஸ் ஆப் சாட்டிங்கி செய்து வந்ததால், தானும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து குழந்தையை கொன்று விட்டதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே தோட்டத்தில், பெற்ற மகளை யூடியூப் வீடியோவை பார்த்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

யூடியூப் வீடியோவை பார்த்து தன் குழந்தையை  கொலை செய்த தாய்.!

கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு வாட்ஸ் ஆப் சாட்டிங்கி செய்து வந்ததால், தானும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து குழந்தையை கொன்று விட்டதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

 குடும்ப வாழ்கை:

குடும்ப வாழ்கை:

திருப்பூர் மாவட்டம் சாமாளபுரம் அருகே தோட்டத்துசாலை வீதியை சேர்ந்தவர் நாகராஜ்-தமிழ் இசக்கி தம்பதி (21). கணவர் விசைத்தறி மில்லில் வேன் டிரைவராக உள்ளார். தமிழ் விசைத்தறி தொழிலாளி. இவர்களுக்கு மகள் ஷிவான்யா ஸ்ரீ (2.5). இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் நாகராஜூக்கு பழக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வாட்ஸ் ஆப் சேட்டிங்:

வாட்ஸ் ஆப் சேட்டிங்:

இந்நிலையில், இரவில் அதிக நேரம் வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்தாகவும் கூறப்படுகின்றது. இதனால் கணவர் மீது சந்தேகமடைந்த தமிழ் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் பேசுவதை நாகராஜ் நிறுத்திவிட்டார். மேலும் தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்துள்ளார். இதனால் விரக்தியடைந்த தமிழ் தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார்.

டியூப்பை பார்த்து கொலை:

டியூப்பை பார்த்து கொலை:

தற்கொலை செய்து இறந்துவிட்டால், தன் குழந்தை அனாதையாகிவிடும் என்று நினைத்து, பிறகு குழந்தையை எப்படி கொல்வது என்று யூடியூப் மூலம் வீடியோவை தேடி பார்த்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 9ம் தேதி) கணவர் வெளியே சென்றுவிட்டார்.

இந்நிலையில் யூடியூப் காட்சியின் உள்ள படி வீட்டிற்கு உள்ளே வைத்துள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் போட்டு அமுக்கி கொலை செய்துவிட்டார். பிறகு கணவர் பைக் வரும் சத்தம் கேட்டு கட்டலில் மயங்கியபடி படுத்துக் கொண்டார். பிறகு குழந்தை எங்கே என்று தேடிய பிறகு தண்ணீர் தொட்டியில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

போலீசில் புகார்:

போலீசில் புகார்:

மனைவி தான் நன்றாக தூங்கி விட்டேன். வீட்டில் குழந்தையை விளையாடி தண்ணீர் தொட்டி மீது ஏறி விழுந்து இருக்கலாம். வீட்டிற்கு வெளியே செல்லும் மர்ம நபர்கள் யாரேனும் குழந்தையை தூக்கி தொட்டிற்குள் போட்டு இருக்கலாம் என்று கூறியதால், மனைவியை நம்பிவிட்டார் நாகராஜ் இதுகுறித்து மங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் கிடுக்குபிடி:

போலீசார் கிடுக்குபிடி:

வீட்டில் இருந்த மனைவி தமிழ் இடம் போலீசார் கிடுக்கப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை 2.5 வயது குழந்தை பெரிய பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மீது ஏறி விழுந்திருக்க முடியாது. தமிழ் போலீசாரிடம் மாற்றிய கூறியபடி, உங்களை அடித்து மயக்க நிலைக்கு கொண்டு சென்றவர்கள் யார், அவர்கள் எண்ண நிறத்தில் உடை அணிந்து இருந்தனர் என்று கேட்டனர். இதற்கும் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாணையில் இறங்கினர். கணவர் மீதுள்ள சந்தேகத்தால் குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். கணவர் மீதுள்ள சந்தேகத்தால், 21 வயதுள்ள இளம்பெண் பெற்ற மகளை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
mother confessed that i killed by daughter like youtube video in police custody : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X