Home
Social media

பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த காரியம்! கொந்தளித்த நெட்டிசன்ஸ்!

'காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பார்கள், இதற்கான விளக்கம் காகம் தனது குஞ்சு கருப்பாகவே இருந்தாலும் அதன்மீது அன்பு காட்டி, இரைதேடி வந்து தன் அலகால் உணவூட்டும். ஆனால் மற்ற பறவையினங்கள் காகம் கருப்பாக இருப்பதால் சற்று அஞ்சி ஒதுங்கியே இருக்கும்.

பழமொழியின் உண்மை விளக்கம்

பழமொழியின் உண்மை விளக்கம்

காகம் தனது குஞ்சை வெறுக்குமா? வெறுக்காது. என்ன ஆனாலும் அது அதன் குழந்தை அல்லவா? அதேபோல் தனது பிள்ளைகள் என்னதான் அழகாக இல்லாவிட்டாலும் கூன், குருடு, செவிடாகவே இருந்தாலும் ஒரு தாயானவள் அரவணைத்துப் பாதுகாப்பாள் என்கிறது இந்த பழமொழியின் விளக்கம்.

மக்களை கொதிப்படையச் செய்த வீடியோ

மக்களை கொதிப்படையச் செய்த வீடியோ

ஆனால் இதற்கு முரணாகத் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை வைத்து அமெரிக்காவில் உள்ள ஒரு தாய் செய்த காரியம் சமூக வலைத்தளத்தையே கொதிப்படையச் செய்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

அலட்சியமாக குழந்தையை கையாண்ட தாய்

அலட்சியமாக குழந்தையை கையாண்ட தாய்

அமெரிக்காவில் உள்ள டென்னிஸி என்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், அவர் பெற்ற குழந்தையை ஒற்றைக்கையில் வைத்துக்கொண்டு, மறுகையில் சிகரெட் பிடித்துப் புகைவிட்டுக் கொண்டே அந்த குழந்தையை ஒற்றைக்கையில் அலட்சியமாக தூக்கி இறக்கிய லைவ் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாத குழந்தைக்கு இந்த நிலையா?

ஒரு மாத குழந்தைக்கு இந்த நிலையா?

டைப்ரஷா செஸ்டோன் என்ற இந்த பெண், ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்து ஒரு மாதம் காலமே ஆன நிலையில், இவர் தனது குழந்தையைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளாமல் அலட்சியமாகக் கையாளுவதை லைவ் வீடியோவகை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

வீடியோவை பார்த்ததும் புகார்

வீடியோவை பார்த்ததும் புகார்

இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பலர், அவரது கமெண்டில் சென்று உடனே இதை நிறுத்துங்கள் என கமெண்ட் செய்தனர். இன்னும் சிலர் இவரை திட்டியும் கமெண்ட் செய்துள்ளனர். சிலர் இந்த வீடியோவை பார்த்ததும் புகார் அளித்தனர்.

இந்த குழந்தை எனக்கு வேண்டாம்

மக்கள் அளித்த புகாரின் பெயரில், அதிகாரிகள் நேரடியாக டைப்ரஷா செஸ்டோனின் இல்லத்திற்கே சென்று அவரை விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த பெண் "இந்த குழந்தை எனக்கு வேண்டாம், நான் வேண்டுமென்று தான் அப்படிச் செய்தேன்" என்று அதிகாரிகளிடம் திமிராகப் பதில் அளித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Mom tosses newborn with one hand while smoking : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X