கேரளாவுக்கு உதவ தயார் மோடி டுவிட்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.!

கேரளாவுக்கு மத்தியர அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாரக உள்ளது என்று மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும் அவர் மோடி தெரிவித்து

|

புதுடெல்லி: கேரளாவில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. புதன் கிழமை மட்டும் சுமார் 25 பேர் மழையால் இறந்தனர்.

கேரளாவுக்கு உதவ தயார் மோடி டுவிட்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.!

வியாக்கிழமை சுமார் 18 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால், கேரளா வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில் மோடி டுவிட்டரில் கேரளாவுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கன மழை:

கன மழை:

கடந்த சில மாதங்களாக கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கன மழை பெய்துள்ளது. காட்டாரு, அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. இதைத்தொடர்ந்து அணைகளும் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டன.

வீடுகள் நீரில் மூழ்கின:

வீடுகள் நீரில் மூழ்கின:

தற்போது கன மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வீடுகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மலைபிரதேசங்களிலும் நிலசரிவு ஏற்பட்டுள்ளது. ரோடுகளும் வீடுகளும் வாகனங்களும், நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்:

மீட்பு பணிகள்:

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ராணுவ வீரர்களும், போலீசார்களும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்களும், தன்னார்வர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமானோர் மீட்கப்பட்டு முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய, மாநில, பொது மக்கள் சார்பிலும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மேலும் கொச்சி விமான நிலையம் வரும் 18ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை உயர்வு:

பலி எண்ணிக்கை உயர்வு:

கேரளாவில் மழையால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. புதன் கிழமை மட்டும் ஓரே நாளில் பல்வேறு பகுதிகளில் சுமார் 25 பேர் பலியாகினர். வியாழக்கிழமையான இன்று 20 பேர் இறந்தாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 65ஐ எட்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர்பலி எண்ணிக்கை 100ஐ தொடும் அச்சம் எட்டியுள்ளது.

மோடி டுவிட்:

மோடி டுவிட்:

இந்நிலையில் கேரளாவுக்கு மத்தியர அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாரக உள்ளது என்று மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும் அவர் மோடி தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Modi promises all help to Kerala CM : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X