சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும்.! இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.!
மோடிக்கு 2வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் என் டிவிட்டர் பக்கத்தை நிரந்தரமாக அளித்துவிடுவேன் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு 2வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் என் டிவிட்டர் பக்கத்தை நிரந்தரமாக அளித்துவிடுவேன் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னணி
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பனி நடுமுழுதும் வேகமாகப் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கிவிட்டது, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவாக பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

மோடிக்கு இரண்டாம் வாய்ப்பு வேண்டும்
இந்த நேரத்தில் நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு தேர்தல் முடிவால் பற்றி டிவீட் செய்துள்ளார் அதில் "மோடிக்கு இரண்டாம் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், நான் என் டிவிட்டர் பக்கத்தை நிரந்தரமாக அழித்து விடுவேன் என்று உறுதிப்படக் கூறிக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டிவீட்
நடிகர் சித்தார்த் கடந்த சில மாதமாக மோடியின் பேச்சிற்குக் கடுமையாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக முன்னிலை வகிக்கும் இந்நேரத்தில் சித்தார்த் இப்படிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாமதமாகும் முடிவுகள்
இம்முறை பதிவான வாக்குகளுடன்ஒப்புகை சீட்டும் சரிபார்க்கப்படுவதால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications