கோழிக்குஞ்சு உயிருக்காக போராடிய சிறுவனுக்கு சிறப்பான மரியாதை

சிறுவனுக்கு பள்ளி நிர்வாகம் சான்றிதழ் கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது.

|

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது டெரெக் லால்ஷான்ஹிமா என்ற சிறுவனின் மனித நேயமிக்க ஒரு செயல் நாடு முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளது

கோழிக்குஞ்சு உயிருக்காக போராடிய சிறுவனுக்கு சிறப்பான மரியாதை

தனது கவனக்குறைவால் காயம் அடைந்த கோழிக்குஞ்சு ஒன்றை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு இந்த சிறுவன் ஓடியுள்ளான். அதுமட்டுமின்றி தான் சேமிப்பாக வைத்திருந்த பத்து ரூபாயை மருத்துவரிடம் கொடுத்து அந்த கோழிக்குஞ்சை காப்பாற்றுங்கள் என கூறியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சிறுவனின் இந்த செயல் தற்போது நாடு முழுவதிலும் இண்டர்நெட்டில் வைரலாகியுள்ளது
கோழிக்குஞ்சு உயிருக்காக போராடிய சிறுவனுக்கு சிறப்பான மரியாதை

இந்த சிறுவனின் இந்த செயலால் நாடு முழுவதும் ஒரே நாளில் ஹீரோவான டெரெக் லால்ஷான்ஹிமா அவன் படித்து வரும் பள்ளியும் மரியாதை செலுத்தியுள்ளது. அந்த சிறுவனுக்கு பள்ளி நிர்வாகம் சான்றிதழ் கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. சான்றிதழை கையில் வைத்து கொண்டு அந்த சிறுவன் புன்னகையும் நிற்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

கோழிக்குஞ்சு அடிபட்டதும் தன்னுடைய பெற்றோர்களிடம் அந்த கோழிக்குஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் உடனே தானே அந்த கோழிக்குஞ்சை சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்து சென்றதை கேள்விப்பட்டு மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மருத்துவமனையின் ஊழியர் ஒருவர்தான் சிறுவனின் இந்த செயலையும் புகைப்படத்தையும் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து இதனை உலகிற்கு தெரிவித்துள்ளார்.

கூகுள், பேஸ்புக்கை ஏமாற்றி 840 கோடி சுருட்டிய பலே இளைஞர்!

கூகுள், பேஸ்புக்கை ஏமாற்றி 840 கோடி சுருட்டிய பலே இளைஞர்!

லிதுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், 2013 - 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 122 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை ஏமாற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் அந்நிறுவனங்களின் சர்வரை ஹேக் செய்யவில்லை. அவர்களது பெருநிறுவன வங்கி கணக்கு விவரங்களை திருடவில்லை. மாறாக அவருக்கு சொந்தமான பணத்தை கேட்டு பெறுவது போல வெளிப்படையாக பெற்றார்.

இவல்டாஸ் ரிமாசாஸ்கஸ்

இவல்டாஸ் ரிமாசாஸ்கஸ்

இவல்டாஸ் ரிமாசாஸ்கஸ் என்ற அந்த இளைஞர் ஒரு எளிய திட்டத்தை வகுத்தார். நீண்டகாலமாக இருக்கும் பாரம்பரிய ஏமாற்றுவித்தைகள் போலில்லாமல், அந்நிறுவனங்கள் ஆர்டர் செய்யாத பொருட்களுக்கான பில்களை அனுப்பினார். அவை அச்சுஅசலாக அங்கீகரிக்கப்பட்டவை போல இருக்கவேண்டும் என்பதற்காக அவற்றுடன் ஒப்பந்தம் மற்றும் அதிகாரப்பூர்வ பெருநிறுவன தகவல்தொடர்புகள் போன்ற சில போலியான ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினார்.

குவாண்டா கம்ப்யூட்டர்

குவாண்டா கம்ப்யூட்டர்

லட்வியாவில் குவாண்டா கம்ப்யூட்டர் என்ற பெயரில் ஒரு போலி வன்பொருள் நிறுவனத்தையும் அவர் பதிவு செய்தார். இது தைவானில் உள்ள ஒரு உண்மையான நிறுவனத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைப்ரஸ், லிதுனியா, ஹங்கேரி

சைப்ரஸ், லிதுனியா, ஹங்கேரி

வெளிப்படையாக கூறவேண்டுமானால், அவரது போலியான பில்கள் நம்பும்படியாக இருந்ததால், இரு நிறுவனங்களும் அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவில்லை. அவர்கள் வெறுமனே அந்த இளைஞருக்கு, சைப்ரஸ், லிதுனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வங்கி கணக்குகள் வாயிலாக பணத்தை செலுத்தியுள்ளனர்.

30 வருட சிறைதண்டனை

30 வருட சிறைதண்டனை

மிகவும் தாமதமாகவே கூகுள் நிறுவனம் இந்த தந்திரமான மோசடியை கண்டுபிடித்திருந்தாலும், அந்ந இளைஞர் தற்போது இணைய மோசடி, மோசமான அடையாள திருட்டு மற்றும் பணமோசடி ஆகியவற்றிற்காக அமெரிக்காவில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார் .தான் திருடியதில் 50மில்லியன் டாலரை திருப்பித்தர அவர் ஒப்புக்கொண்டிருத்தாலும் கூட, ஜூலை 29 அன்று தண்டனை அறுவிக்கப்படும்போது 30 வருட சிறைதண்டனை வழங்க கூட வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Mizoram Kid Who Took Injured Chick To Hospital Has Just Been Rewarded By His School: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X