Home
Social media

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

300 தெர்மாகோல்களுக்கு ரூ.10 லட்சம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை கேட்டு, அனைவரும் நீ தெர்மா கோல் விட்ட கூடா நாங்க பெருசா நினைக்கல ஆனா ரூ.10 லட்சம் செலவு ஆச்சு சொன்னையே அத மட்டும் எங்களால் மனி

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ எனவும், தெர்மாகோல் ராஜூ எனவும் சமூக வலைதளங்கில் கிழித்து தொங்கவிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் தெர்மாகோல் குறித்து பேசியுள்ளார்.

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

இதுவும் தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதற்கு காரணம் சமூக வலைதளம் தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 விரைவாக ஆவியாகிறது:

விரைவாக ஆவியாகிறது:

உலகம் வெப்பமயம் (குளோபல் வாமிங்) வேகமாக ஆகி வருவதால், பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தக்க சூழலில் பெய்யும் மழையும் பெய்ய மறுக்கிறது. இதனால் வெட்பம் அதிகரித்து நீர்நிலைகளில் தண்ணீர் விரைவாக ஆவியாகிறது. நீர் ஆவியாவதை தடுக்க மாற்றும் வழியில் அமெரிக்க விஞ்ஞானிகளும் களம் இறங்கினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் குளம்:

லாஸ் ஏஞ்சல்ஸ் குளம்:

கடந்த 2015ம் ஆண்டில் 96 மில்லியன் மிதக்கும் பிளாஸ்டிக் பந்துகளை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெரிய குளத்தில் கொட்டி பரிசோதனை நடத்தினர்.

ஆவியாதல் தடுக்கப்பட்டது:

ஆவியாதல் தடுக்கப்பட்டது:

பிளாஸ்டிக் பந்துகள் லாஸ்ஏஞ்சல்ஸ் குளம் முழுவதும் நிரப்பட்டதால், கடந்த 2015 ஆகஸ்ட் முதல் 2017 மார்ச் வரை 1.7 மில்லியன் கன மீட்டர் நீர் ஆவியாதலில் இருந்து தடுக்கப்பட்டது. திட்டம் வெற்றி பெற்றதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்தனர். ஒரு சில நாடுகளில் இத்திட்ட மாதிரி செயல்படுத்த முனைப்பு காட்டப்பட்டது.

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

அமெரிக்காவின் திட்டத்திற்கு அதிகம் செலவு ஆகும் என்பதால், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மா கோல்களை கொண்டு மதுரையில் உள்ள வைணை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தெர்மா கோல்களை செல்லோ டேப்பால் ஓட்டி அணையில் அணையில் அவரே மிதக்க விட்டார்.

 300 தெர்மாகோல்கள்:

300 தெர்மாகோல்கள்:

10ச.கி.மீ அளவுள்ள வைகை அணைக்கு 300 தெர்மாகோல்களை செல்லோ டேப்பால் ஒட்டி பரிசல்களில் கொண்டு அணையில் விடப்பட்டது. அது வீசும் காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் தெர்மா கோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கின. இதைத்தொடர்ந்து டிவி, பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்து செய்திகளும், கார்ட்டூன்களும் பறந்தன.

 ரூ.10 லட்சம்:

ரூ.10 லட்சம்:

300 தெர்மாகோல்களுக்கு ரூ.10 லட்சம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை கேட்டு, அனைவரும் நீ தெர்மா கோல் விட்ட கூடா நாங்க பெருசா நினைக்கல ஆனா ரூ.10 லட்சம் செலவு ஆச்சு சொன்னையே அத மட்டும் எங்களால் மனிக்க முடியாது என ம்மீஸ் போட்டு கலாய்த்தனர்.

கடுப்பான விஞ்ஞான அமைச்சர்:

கடுப்பான விஞ்ஞான அமைச்சர்:

சமூக வலை தளங்களிலும் கூட்டுறவுத்துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக விஞ்ஞான அமைச்சர் என்றும் மீம்ஸ்களிலும் கிண்டல் அடிக்க தொடங்கினர். பல்வேறு இடங்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சென்றாலும் அவரை பத்திரிக்கையாளர்கள் மேலும் இதுபோல் திட்டம் ஏதாவது உள்ளதா என நக்கலா கேள்வி கேட்டக தொடங்கியதால், கடுப்பாகி இருந்தார்.

தெர்மாகோல் அமைச்சர் பிரச்சாரம்:

தெர்மாகோல் அமைச்சர் பிரச்சாரம்:

மதுரை அ.தி.முக.வேட்பாளர் ராஜ் சத்தியனை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுரையில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூடி வேடிக்கை பார்ப்பார்கள் என்று தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அதே போல தான் தற்போது நடிகர் - நடிகைகளின் பிரச்சாரத்திற்கு கூட்டம் கூடுவதாக தெரவித்தார்.

பெயரை பரவ செய்தது சமூக வலைதளங்கள்:

பெயரை பரவ செய்தது சமூக வலைதளங்கள்:

தெர்மக்கோல் விஷயத்தில் பொறியாளர் செய்த தவறினால் தெர்மக்கோல் ராஜூ என தனது பெயரை பரவ செய்தது சமூக வலைதளங்கள் என்று அமைச்சர் கூறினார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
minister sellur raju about thermocol : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X