ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் அவுட்லுக்.காமைக் களமிறக்கும் மைக்ரோசாப்ட்

Posted By: Karthikeyan
ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் அவுட்லுக்.காமைக் களமிறக்கும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் வழங்கிய அவுட்லுக்.காம், அது வழங்கிய ஹாட்மெயிலைவிட மிக விரைவில் உலகம் முழுவதற்கும் பிரபலமானது. இந்த அவுட்லுக்.காம் அப்ளிகேசனை ஏறக்குறை 25 மில்லியன் பேர் உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆன்ட்ராய்டு சாதனங்களை வைத்திருப்பவர்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திலும் இந்த அவுட்லுக் அப்ளிகேசனை களமிறக்க இருக்கிறது மைக்ரோசாப்ட். இதன் மூலம் ஆன்ட்ராயிடில் உள்ள ஜிமெயிலை இந்த அப்ளிகேசன் அகற்றிவிடும் என்று தெரிகிறது.

இதில் இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் விண்டோஸ் 8 இயங்கு தளத்தை களமிறக்கும் முன்பே இந்த ஆன்ட்ராய்டு அவுட்லுக் அப்ளிகேசனை மைக்ரோசாப்ட் களமிறக்கி இருந்தது. மேலும் இந்த அப்ளிகேசனை மிக விரைவில் விண்டோஸ் 8 மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களிலும் களமிறக்க இருக்கிறது மைக்ரோசாப்ட்.

இந்த அப்ளிகேசன் ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ளது. அதாவது புஷ் நோட்டிபிக்கேசனைப் பார்த்தவுடன் இதன் மெயிலை திறந்து பார்த்துவிடலாம். மேலும் மெயில்களோடு போட்டோக்களையும் இணைத்து அனுப்பவும் முடியும். அதே நேரத்தில் பெறவும் முடியும். அதுபோல் மைக்ரோசாப்ட்டின் காலண்டர் போன்ற மற்ற அப்ளிகேசன்களையும் இந்த அப்ளிகேசனில் சின்க் செய்ய முடியும்.

மேலும் இந்த அப்ளிகேசனில் ஸ்டேன்டர்ட் மற்றும் கஸ்டம் போல்டர்களை உருவாக்க முடியும். ஆன்ட்ராய்டில் உள்ள ஜிமெயிலுக்குப் பதிலாக இந்த அவுட்லுக் அப்ளிகேசனைக் கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்களும் உள்ளன. முதல் காரணம் என்னவென்றால் ஜிமெயிலில் சைன் செய்யும் போது அது தானாகவே ஆன்ட்ராய்டு சாதனத்திலும் சைன் இன் ஆகிவிடும். அதுபோல் யுடியூப் மற்றும் கூகுள்+ போன்ற பிரபலமான அப்ளிகேசன்களிலும் சைன் ஆகிவிடும்.

எனினும் ஆன்ட்ராய்டுக்கான அவுட்லுக்.காம் அப்ளிகேசனை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேசன் ஆன்ட்ராய்டின் 2.1 வெர்சன் முதல் 2.3.3 வெர்சன் மற்றும் 4.0 முதல் 4.1 வெர்சன் வரை உள்ள இயங்கு தளங்களில் இயங்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot