சில்மிஷத்தில் அப்பா வயது நடிகர்.! மீடூவில் கதறிய தமிழ் நடிகை.!

தற்போது, டுவிட்டரில் பக்கத்தில், அப்பா வயதுள்ளது நடிகர் ஒருவர் தன்னை குளியலறையில் வைத்து சில்மிஷம் செய்ய முயன்றார் என்று டுவிட்டரில் கதறியுள்ளார்.

|

டுவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்ட மீ டூ ( #mee too) என்ற ஹேஷ்டேக் தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி பட்டடைய கிளப்பி கொண்டிருகின்றது.
அதில் ஏராளமான பாலியல் சீண்டல்களும், பாலியல் வல்லுறவுகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

சில்மிஷத்தில் அப்பா வயது நடிகர்.!  மீடூவில் கதறிய  தமிழ் நடிகை.!

இதில் நாள் ஒரு பொழுது, நொடி ஒரு பொழுது என ஒவ்வொரு நேரத்திற்கும் மீடூ ஹேஷ்டேக் தன்னை பரபரப்புடன் வைத்துக் கொள்கின்றது. தற்போது, டுவிட்டரில் பக்கத்தில், அப்பா வயதுள்ளது நடிகர் ஒருவர் தன்னை குளியலறையில் வைத்து சில்மிஷம் செய்ய முயன்றார் என்று டுவிட்டரில் கதறியுள்ளார்.

அந்த விஷயம் தான் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. மேலும் மீடூ என்ற ஹேஷ்டேக் தன்னை எப்போதும் பரபரப்பாகவும் பிஸியாகவும் வைத்துள்ளது என்பது நிசர்சமான உண்மை.

 பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மீ டூ:

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மீ டூ:

டுவிட்டர் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மீடூ ஹேஷ்டேக் தான். அதில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகவே துவங்கப்பட்ட ஒன்று. இதில் துவங்கப்பட்ட நாடுகளிலும் கூட இல்லாத அளவுக்கு இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சீண்டல்கள் அதிகமான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் சினிமா துறை மட்டும் மீடூவில் சிக்கி சின்னா பின்னமாகியுள்ளது. இதில் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால் சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை விளம்பரத்திற்காக முன் வைத்தனர். இது அம்பலமாகி மானம் கப்பலேறியது தான் மிச்சமாக இருந்தாலும், அடுத்த தலைமுறையை சுட்டி காட்டி மாற்ற வேண்டும் என்றே இதில் மையப்படுத்தி வருகின்றனர்.

 மீடூ இந்தியாவில் பூதாகரமாக்கியது:

மீடூ இந்தியாவில் பூதாகரமாக்கியது:

மீடூ வை பொறுத்த வரையில் உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் அதிக பாலியல் குற்றச்சாட்டு வைத்த தளமாக இருக்கின்றது. இதில் இந்திய சினிமாவில் தான் பெண்கள் இந்த அளவுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகப்பட்டு இருக்கின்றனர் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்த நிலையில், மீடூ ஹேஷ்டேக் அதை நிரூபித்துள்ளது.

வைரமுத்து முதல் நடிகர் அர்ஜூன் வரை:

வைரமுத்து முதல் நடிகர் அர்ஜூன் வரை:

மீடூ ஹேஷ்டேக்கில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி முதன் முதலில் குற்றச்சாட்டு வைத்தார். இதைத் தொடர்ந்து பல பாடகிகளும், சில பெண்களும் குற்றச்சாட்டை வைரமுத்து மீது வைத்தனர். இது பெரிய விஸ்பரூபம் எடுத்தது. பிறகு, இதில், நடிகர் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், இசை அமைப்பாளர் ஒருவரும் சிக்கினர்.

பிறகு, இதில் நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரனும் குற்றச்சாட்டை முன்வைத்தார். பிறகு அர்ஜூன் மீது வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது.

 புது நடிகை கதறல்:

புது நடிகை கதறல்:

‘வேறென்ன வேண்டும்' என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரெர்னா கண்ணா. தெலுங்கு நடிகையான இவர் மீ டூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா' என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். படம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின.

 சிவப்பு புடவையில் வரச்சொன்னார்:

சிவப்பு புடவையில் வரச்சொன்னார்:

என்னைத் திரையுலகில் வழிநடத்த யாரும் இல்லை. இந்த துறைக்கு நான் புதியவள். ஒருமுறை ஐதராபாத்திலிருந்து ஒரு நடிகர் என்னை அழைத்தார். ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், ஒரு கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். சிகப்பு நிறச் சேலையில், ஈரமான முடியுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரச் சொன்னார்.

என் அம்மாவை உடன் அழைத்துவரக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக நான் என் அம்மாவை அழைத்துச் சென்றேன்.

 அவரும் கழிவறைக்குள் நுழைந்தார்:

அவரும் கழிவறைக்குள் நுழைந்தார்:

நாங்கள் அறையில் இருந்தபோது எனது ஐ லைனரை நீக்கச் சொன்னார். ஐ லைனர் இல்லாமல் எனது முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதாக கூறினார். நான் கழிவறைக்கு ஐ லைனரை அழிக்கச் சென்றபோது, அந்த நடிகர் என் அம்மாவிடம் முகம் கழுவிவிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

 அப்பா வயதில் சில்மிஷம் செய்தார்:

அப்பா வயதில் சில்மிஷம் செய்தார்:

நான் என் கண்ணை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் திடீரென்று கண்ணாடியை நோக்கி என்னைத் தள்ளியபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் மிகவும் பயந்துபோய் அவரை தள்ளினேன். இவை அனைத்தும் சில விநாடிகளில் நடந்து முடிந்தன. பின்னர் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார்.

எனது அப்பாவயதுள்ள ஒருவர் இப்படி நடந்து கொண்டது கவலையும் ஆச்சரியத்தையும் தந்தது. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.

இணக்கமாக இருக்க சொன்னார்கள்:

இணக்கமாக இருக்க சொன்னார்கள்:

தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இயக்குனர், எனது விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் எனது மேனேஜரின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டார்.

நான் அவருடன் இணக்கமாகச் சென்றால் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக எனது மேனேஜரிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார். நான் கோபத்துடன் திட்டி அவரது அலுவலகத்தில் இருந்து வந்தேன்.

பெண்கள் இணக்கமாகப் போவதால்தான் பெரிய படங்களில் பணியாற்றுகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மனப்போக்கை ஊக்குவிக்க முடியாது.

பெண் மூன்று முறை யோசிப்பாள்:

பெண் மூன்று முறை யோசிப்பாள்:

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் தற்போது பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதற்கு முன்னர் மூன்று முறை யோசிப்பாள்.

அப்படி வெளியில் சொல்லும்போது அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மீ டூ இயக்கம் ஒவ்வொரு பாலினத்தவரும் தங்களை அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உருவாகியுள்ளது.

ஓரின சேர்க்கையினரும் முன்வர வேண்டும்:

ஓரின சேர்க்கையினரும் முன்வர வேண்டும்:

ஆண்களும், ஓரின சேர்க்கை சமூகத்தினரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேச முன்வர வேண்டும். மீ டூ இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்குமானது.

Best Mobiles in India

English summary
Me Too Row Prerna Khanna accused Tamil Cinema Actor : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X