Home
Social media

130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.!

இந்தியாவில் தமிழக்தில் நிலவில் பாட்டி வடை சூடுகின்றார் என்று எல்லாம் நமக்கு சிறுயவதில் கதை கூறுவார்கள். நாம் எப்போது, நிலவுக்கு செல்வோம் என்று அனைவருக்கும் ஏக்கம் வந்திருக்கும். நாம் மெல்ல மெல்ல வளர்ந

தமிழகத்தில், நிலவில் பாட்டி வடை சுடுகின்றார் என்று எல்லாம் நமக்கு சிறுயவதில் கதை கூறுவார்கள். நாம் எப்போது, நிலவுக்கு செல்வோம் என்று அனைவருக்கும் ஏக்கம் வந்திருக்கும். நாம் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவன் ஆன பிறகு கண்டிப்பாக நிலவுக்கு சென்று உணவு சாப்பிடலாம் என்று நினைப்பவர்களுக்கு காலம் மாறினால் விரைவாக நடக்கும்.

130கோடி இந்தியர் நிலவுக்கு செல்வர்-மீசை முறுக்கும் தமிழன் மயில்சாமி.!

இந்நிலையில், 130 கோடி இந்தியர்களுக்கும் நிலவுக்கு திரும்ப செல்ல வேண்டும் என்று ஒரே அடியாக மீசை முறுக்கியுள்ளார் முன்னாள் சந்திராயன்-1 திட்ட இயக்குனரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணா துரை.

நிலாச் சோறு:

நிலாச் சோறு:

நாம் சிறுவனாக இருக்கும் போது, நமது பாட்டி அல்லது அம்மாமார்கள் ஆகாயத்தில் தெரியும் நிலவை காட்டி சோறு ஊட்டுவார்கள். அங்க பாரு கண்ணு. அங்கு ஒரு பாட்டி நிலவு கால நீட்டி வச்சு வடை சுடுது. அப்படீனு நாம ஆனு வாயை திறந்து பார்ந்து பார்க்கும் போது, உடனே நமக்கு வாயிலை ஒரு பிடி சாப்பாட்டை வைத்து விடுவார்கள். வேறு வழியில்லாமல் நம் விழுங்கி விடுவோம்.

பாட்டி எப்படி வடை சுடுகின்றார்:

பாட்டி எப்படி வடை சுடுகின்றார்:

நிலாவில் பாட்டில் எப்படி வடை சுடுகின்றார். எந்த திசையை நோக்கி அமர்ந்து வடை சுடுகின்றார். அங்கு காக்கை இல்லையா என்று எல்லாம் நமக்கு சந்தேகங்கள் தோன்றாலம். வடை எந்த மாதிரி சுவையாக இருக்கும். அது ஓட்டை வடையா இல்லை தட்டு வடையா என்று எல்லாம் நமக்கு சந்தேக புத்தி தோன்றிய காலம் அது?

நிலாவில் பாட்டி உருவம்:

நிலாவில் பாட்டி உருவம்:

நிலாவை உற்று நோக்கினால், உண்மையிலேயே ஒரு பாட்டி கால் நீட்டி அமர்ந்து வடை சூடுவதாக தொரியும். அனுமான் சிறுவனாக இருக்கும் போது, சூரியனை பழம் என்று நினைத்து தனக்கு அதிகமாக பசி எடுப்பதால், தனது அன்னைக்கு உணவுக்காக அதிக வேலைப்பளு இருக்கும் இதனால், அந்த செம்மையாக இருக்கும் பழத்தை தின்றால், தனது பசியும் ஆறிவிடும். தனது அன்னைக்கும் வேலையாக இருக்காது என்று நினைத்து சூரியனை நோக்கி ஆகாயத்துக்கு செல்வார்.

வடையை திங்க வேண்டும் :

வடையை திங்க வேண்டும் :

நாமும் அனுமான் போல , நிலா வடை எத்தனை சுவையாக இருக்கும் உனடியாக பறக்க வேண்டும் என்று நினைத்தும் உண்டு ஆனால், பறக்க முடியவில்லை. எப்படி நம்மால் முடியவில்ல என்று சிந்தித்ததும் உண்டு. பிறகு நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் தான் இது கதை என்று. ஒரு நாள் அங்கு சென்று பாட்டி உடனே விருந்து சாப்பிட வேண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

விஞ்ஞான காலம்:

விஞ்ஞான காலம்:

விண்வெளியில் உள்ள மற்ற கிரங்களுக்கும் குடிபெயரும் காலம் இன்று எட்டும் நிலையில் இருக்கின்றது. விரைவில் அங்கு செல்லும் காலம் வரும். இது குறித்து நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி நிறுவனங்களும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மயில்சாமி அண்ணா துரை:

மயில்சாமி அண்ணா துரை:

சந்திராயன்-1க்கு திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணா துரை. அவர் வகுத்த பல்வேறு திட்டத்தால், சந்திராயன்-1 விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் இந்தியாவின் முதல் முயற்சியிலேயே நிலவில் தரையிறங்கியது. மேலும், நிலவில் தண்ணீர் இருப்பதையும் முதன் முதல் கண்டறிந்து உலகிற்கு கூறியது. இதனால் பல்வேறு நாடுகளும் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியது.

அரசு பள்ளி மாணவர்களுடன் மயில்சாமி:

அரசு பள்ளி மாணவர்களுடன் மயில்சாமி:

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு பள்ளியில் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன்-1 திட்ட இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை. பிறகு நிருபர்களின் அவர் கூறியது பின்வருமாறு:

 செப்.7ம் தேதி 130 கோடி இந்தியர்:

செப்.7ம் தேதி 130 கோடி இந்தியர்:

செப்டம்பர் 7ம் தேதி 130 கோடி இந்தியர்களும் நிலவுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

அதற்கு பிறகு நிலவை நோக்கி செல்லும், சந்திராயன்-2 நிலவின் நீள் வட்டப்பாதையை ஈர்ப்பு விசையுடன் அடையும். அதன்பின், விக்ரம் பிரக்யான் களங்கள் அதில் இருந்து விலகி மெதுவாக செப்.7ல் நிலவை அடையும் வகையில் திட்டமிட்டுப்பட்டுள்ளது.

 தயார் நிலையில் ஏற்பாடுகள்:

தயார் நிலையில் ஏற்பாடுகள்:

அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. தொழில்நுட்ப ரீதியான சவாலான காரியமாக இருந்தாலும், அனைத்து சோதனகைளும் முடிவடைந்துள்ளது.

50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் :

50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் :

சந்திராயன் நிலவில் இறங்கும் அந்த 15 நிமிடத்திற்காக காத்திருக்கின்றோம். இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு தெரிவித்தார். நாம் இல்லாவிட்டாலும், நமது சந்ததியினர் கண்டிப்பாக நிலவில் பாட்டியோடு சென்று, வடை பாயசத்தோடு படையலே போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Mars, Moon to become habitable for humans in 50 to 60 years : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X