அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

|

பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் அனகோண்டா பாம்பை பார்த்து பீதியில் ஓட்டம் எடுக்காமல் அதைப் பிடிக்க முயன்று இருக்கிறார் இந்த புத்திசாலி கணவர். கணவரின் வினோதமான செயலை கண்ட அவரின் மனைவி அனகோண்டா பாம்பை விட்டுவிடும் படி அலறி குதிக்கும் ஸ்மார்ட்போன் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. இதனால் நடந்த எதிர்பாராத விபரீதம் என்ன தெரியுமா?

அனகோண்டா வகை பாம்பு

அனகோண்டா வகை பாம்பு

அனகோண்டா வகை பாம்புகளை தெரியாதவர்களே இருக்க முடியாது, நிறையத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் பார்க்க விரும்பினால் நீங்கள் இவற்றை தெற்கு அமெரிக்க பகுதிகளில் அதிகளவில் பார்க்கலாம். மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் வகையைச் சேர்ந்த இந்த பாம்புகள் பெரிய உருவத்துடன், வேட்டையாடும் திறன் கொண்டது.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர்

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர்

நீர் நிலைகளிலேயே அதிகளவில் வாழும் இந்த இராட்சச பாம்பு வகை தன் இரையைப் பிடியில் இறுக்கி பிடித்து, கொன்று அதை உட்கொண்டு தரையிலும் வாழ்கிறது. இத்தகைய ஆபத்தான அனகோண்டா பாம்பை பார்த்ததும் விலகிச் செல்லாமல் படகிலிருந்தபடி அதைக் கையில் பிடித்து இழுக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ தற்பொழுது எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாகச் சொன்னால் இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோ மரியா எனும் ஆற்றில், சிர்லேய் ஒலிவிரியா மற்றும் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

17 அடி நீளமுள்ள அனகோண்டா

இவர்கள் படகில் சென்று கொண்டிருக்கும் போழுது, இவர்களின் கண்ணில் சுமார் 17 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பு தென்பட்டுள்ளது. சிர்லேய் ஒலிவிரியாவின் கணவர் பெட்டினோ போர்க்ஸ் அதன் வாலைப் பிடித்து இழுத்துள்ளார். இதை பார்த்த மனைவி பயத்தில் கத்தி கூக்குரலிட்டு அலறி இருக்கிறார். அனகோண்டாவைப் கணவர் இறுக்கிப் பிடிக்க, பாம்பு தப்பிக்க முயன்ற போது படகு தடுமாறியது. இதனால் கணவர் தனது பிடியை விட்டுக்கொடுத்திருக்கிறார்.

உங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள்! அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?உங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள்! அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

இவர்களுக்கு நடந்த விபரீதம்

இவர்களுக்கு நடந்த விபரீதம்

போர்க்ஸின் மனைவி ஒலிவிரியா பாம்பை விட்டுவிடுமாறு வீடியோவில் கதறுகிறார். இதனால் ஒரு கட்டத்தில் போர்க்ஸ் தனது பிடியை விட்டுவிட, அனகோண்டா நழுவி கரை நோக்கி நீருக்குள் சென்றுவிடுகிறது. இதில் விபரீதம் என்னவென்றால், சாதுவாகச் சுற்றித் திரிந்த பாம்பைப் பிடிக்க முயன்ற குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா 600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Man Tries To Catch 17 Foot Anaconda Snake Video Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X