180 டிகிரிக்கு அப்படியே தலையை திருப்பி காட்டிய நபர்.. இதை வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம்!

|

எச்சரிக்கை: இதை யாரும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம் என்று முதலில் கேட்டுக்கொள்கிறோம். சமூக வலைத்தளங்களில் பல விசித்திரமான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்ப முடியாததாகவும் இருக்கும், இன்னும் சில வீடியோக்கள் உண்மையானதாக இருக்கும். அப்படி உண்மையான ஒரு வீடியோ பதிவு தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

180 டிகிரிக்கு தலையை திருப்பிய மனிதன்

180 டிகிரிக்கு தலையை திருப்பிய மனிதன்

வீடியோவில் காணப்படும் ஒரு நபர் தனது தலையை ஏறத்தாழ 180 டிகிரிக்கு அப்படியே சுழற்றி காட்டியுள்ளார். அடுத்த சில நொடியில் அவரின் தலை மறுபடியும் இயல்பு நிலைக்கு வருவதை வீடியோ பதிவு தெளிவாக காட்டுகிறது. பெயர் தெரியாத இந்த நபர் தனது தலையை 180 டிகிரிக்கு முறுக்கும் வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதுவாப்பா உங்க பார்ட்டி ட்ரிக்ஸ்

இதுவாப்பா உங்க பார்ட்டி ட்ரிக்ஸ்

இந்த வீடியோவை டிக்டோக் பயனர் @ sheaabutt00 என்பவர் வெளியிட்டார், "Party trick! #duet if you can do this"- உங்களால் முடிந்தால் இந்த பார்ட்டி ட்ரிக்ஸை செய்து பாருங்கள் என்ற வாக்கியத்துடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. வீடியோவில், அந்த நபர் தன் கன்னத்தில் ஒரு கையையும் மற்றொரு கையை அவரின் தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தலையை திரும்புவதை நீங்கள் காணலாம். பின்னர்கிமீண்டும் தலையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து தம்பஸ் அப் காண்பிக்கிறார்.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

வைரல் வீடியோ பதிவு

இந்த வீடியோவில் உள்ள செயல்கள் சிறந்த வல்லுநர்களால் செய்யப்படுகின்றது அல்லது பயிற்சி பெற்ற நிபுணர்களால் மேற்பார்வையிடப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. இதை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று டிக்டாக்கின் எச்சரிக்கை வீடியோவின் கீழ் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ விரைவில் சமூக ஊடகங்களில் வைரலாகி, 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 53,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது.

மருத்துவர்கள் எச்சரிக்கை

மருத்துவர்கள் எச்சரிக்கை

ஹைப்பர்மொபைல் ஜாய்ண்ட்ஸ் அல்லது இணைப்பு திசு கோளாறுகள் உள்ளவர்கள் தலையை இப்படி சுழற்றலாம். ஆனால், இப்படி செய்வதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சேலேஞ் பிரிவின் கீழ் பஹிவிடப்பட்டுள்ளதனால், இந்த ஸ்டண்ட்டை சாமானியர்கள் முயற்சிப்பதை எதிர்த்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வீடியோ பற்றிய உங்களுப்பிய கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Man rotates his head 180 degrees in a video that went viral on the internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X