இதுக்கு தனி 'தில்' வேணும்: நடுகடலில் திமிங்கலம் மீதி படுத்து சவாரி! வைரல் வீடியோ!

|

சமூக வலைதளத்தில் தினமும் டிரெண்டிங்கில் பல விசித்திரமான வீடியோகள் வந்து செல்கிறது. அதிலும் விசித்திரமான வீடியோகளுக்கு எப்பொழுதும் பஞ்சமில்லை. விசித்திரமான மனிதர்கள் கொண்ட இந்த பூமியில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படி யாரும் யூகித்து பார்க்க முடியாத ஒரு வீடியோ தான் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

திமிங்கிலத்தின் மீது அமர்ந்து சவாரி

திமிங்கிலத்தின் மீது அமர்ந்து சவாரி

நடுக்கடலில் கப்பலில் சென்று கொண்டிருந்த நபர் கடலின் மேற்பரப்பில் சுற்றி வளம் வந்த திமிங்கிலத்தின் மீது அமர்ந்து சவாரி செய்கிறார். இந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் இந்த வீடியோவில் உள்ள நபர் வெறும் அரைக்கால் டவுசர் உடன் திமிங்கிலத்தின் மீது அமர்ந்து சவாரி செய்கிறார். பார்ப்பதற்கே சற்று பதட்டமாகத் தான் இருக்கிறது.

திமிங்கில கூட்டத்திற்கு மத்தியில் செய்யுற வேலையா இது?

திமிங்கில கூட்டத்திற்கு மத்தியில் செய்யுற வேலையா இது?

சவுதி அரேபியாவின் யான்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தான் திமிங்கிலத்தின் மீது அமர்ந்து சவாரி செய்திருக்கிறார். நடு கடலில் படகில் சென்று கொண்டிருக்கும் இவர்கள், கடலில் நீந்தி வரும் ஒரு திமிங்கில கூட்டத்தைப் பார்க்கின்றனர். திமிங்கிலங்கள் இருக்கும் பகுதிக்கு இடையில் படகைக் கொண்டு செல்கின்றனர். படகு அருகில் சென்றதும் எந்த திமிங்கிலம் மீது சவாரி செய்ய ஏதுவாக இருக்கிறது என்பதை நோட்டம் விடுகிறார் அந்த நபர்.

பட்டையை கிளப்பும் IOB வங்கி! வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை! அப்படியென்ன வசதி?பட்டையை கிளப்பும் IOB வங்கி! வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை! அப்படியென்ன வசதி?

படகின் விளிம்பிலிருந்து ஒரு ஜம்ப்

முதலில் படகின் வலது புறம் இருக்கும் திமிங்கிலத்தின் மீது சவாரி செய்ய முயன்று படகின் விளிம்பிற்குச் செல்லும் நபருக்கு லாவகமாக பிடி கிடைப்பதற்குள் திமிங்கிலம் படகின் அருகிலிருந்து நகர்ந்து விடுகிறது. உடனே அந்த நபர் படகின் இடது புறத்தில் வரும் திமிங்கிலத்தின் மீது சவாரி செய்ய வேகமாக மறுபக்கம் சென்று விளிம்பில் அமர்ந்து காத்திருக்கிறார். சரியான நேரத்தில் திமிங்கிலமும் படகின் அருகில் வந்ததும், அந்த நபர் திமிங்கிலத்தின் மீது குதித்து விடுகிறார்.

திடீரென காணாமல் போன Google Pay ஆப்ஸ்! பீதியான பயனர்கள் - கூகிள் சொன்ன பதில் இதுதான்!திடீரென காணாமல் போன Google Pay ஆப்ஸ்! பீதியான பயனர்கள் - கூகிள் சொன்ன பதில் இதுதான்!

இந்த திமிங்கிலம் மட்டும் ஆபத்து இல்லயாம் ஏன் தெரியுமா?

இந்த திமிங்கிலம் மட்டும் ஆபத்து இல்லயாம் ஏன் தெரியுமா?

திமிங்கிலத்தின் மீது குதித்தவர் திமிங்கிலத்தை நன்றாகப் பிடித்துக் கொண்டார், திமிங்கிலம் படகை விட்டு வேகமாக அவருடன் நகர்ந்து சென்றுவிடுகிறது. அதன் மீது படுத்துக் கொண்டு சவாரி செய்யும் காட்சியைப் படகில் இருந்த அவரின் நபர் வீடியோ பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகியுள்ளது. அவர் சவாரி செய்யும் திமிங்கிலங்களுக்குப் பல் இல்லை என்றும், அவை மனிதர்களை ஒன்றும் செய்யாது என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Man Jumps Over Sea Whale To Take a Ride Video Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X