கரடிக்கு ஆப்பிள் போட சொன்னா ஆப்பிள் ஐபோன போட்டுடேயேப்பா.!

தன்னை அறியாமல் கரடிக்கு விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோனை உணவாக தூக்கி எரிந்த ஒருவரின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

|

நமது வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் சில தருணங்கள், நாம் சற்றும் எதிர்பார்த்திடாத விதத்தில் நடந்துவிடும்.

அதேபோல் தன்னை அறியாமல் கரடிக்கு விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோனை உணவாக தூக்கி எரிந்த ஒருவரின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

யான்செங் வனவிலங்கு பூங்கா

யான்செங் வனவிலங்கு பூங்கா

சீனாவில் உள்ள யான்செங் வனவிலங்கு பூங்காவில் கரடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், கரடிக்கு வாங்கி வந்த ஆப்பிளை உணவாக வழங்குவதற்குப் பதிலாக தன் கையிலிருந்த ஆப்பிள் ஐபோனை உணவாக வழங்கியுள்ளார்.

தவறுதலாக மாற்றி எறியப்பட்ட ஐபோன்

தவறுதலாக மாற்றி எறியப்பட்ட ஐபோன்

இந்தச் சம்பவம் பிப்ரவரி 7 ஆம் தேதி யான்செங் வனவிலங்கு பூங்காவில் நடந்தேறியுள்ளது. கரடிகளுக்கு உணவாக ஆப்பிள் மற்றும் காரட்டை எரிவதற்குப் பதிலாக அவரின் கையிலிருந்த ஆப்பிள் ஐபோனை தவறுதலாக மாற்றி எரிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐபோனை பார்த்து கரடிகள் நடந்துகொண்ட விதம்

ஐபோனை பார்த்து கரடிகள் நடந்துகொண்ட விதம்

அவர் கரடியை நோக்கி ஐபோனை எரிந்ததைவிட, அந்த இரண்டு கரடிகளும் ஐபோனை பார்த்து நடந்துகொண்ட விதம் தான் அனையவரையும் கவர்ந்துள்ளது. எறியப்பட்ட ஐபோனை இரண்டு கரடிகளில் ஒரு கரடி நுகர்ந்து பார்த்துவிட்டு, வாயால் அந்த விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோனை கவ்வி ஓட்டம்பிடித்து மறைந்துவிட்டது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

ஆப்பிள் போனின் உரிமையாளர் உடனே வனவிலங்கு அதிகாரிகளிடம் நடந்ததை எடுத்துச் சொல்லி, கரடியிடம் இருந்து தன் ஐபோனை திரும்ப பெற்று கொண்டார். வனவிலங்கு பூங்காவில் இருந்த இரண்டு கரடிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பகிரப்பட்டும் வீடியோ

அதிகம் பகிரப்பட்டும் வீடியோ

தற்பொழுது இந்த வீடியோ பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆப்பிள் ஐபோன் இன் அருமை மனிதர்களை மட்டுமில்லை கரடிகளையும் கவர்ந்துள்ளது என்று அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Man accidentally throws iPhone instead of apples into bear enclosure : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X