பயணத்தை இனிய பயணமாக மாற்றும் புதிய அப்ளிக்கேஷன்!

Posted By: Staff

ஆன்லைன் இணையதளமான மேக்மைட்ரிப், சோஷியல் மீடியாவிற்காக ஒரு புதிய அப்ளிக்கேஷனை உருவாக்கி உள்ளது. இந்த அப்ளிக்கேஷன் மூலம் தன்னுடன் சேர்ந்து பயனம் செய்பவர்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஃப்லைட்டில் பயணம் செய்யும் போது புதிய மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. இதனால் அந்த பயணம் இனிமையாக முடிய வாய்ப்பு குறைவு தான். இந்த குறையை தீர்க்க வருகிறது ட்ரிப்பலாங் என்ற புதிய அப்ளிக்கேஷன்.

இந்த அப்ளிக்கேஷனை ஃபேஸ்புக், லிங்க்டுஇன் போன்ற சோஷியல் மீடியாக்களில் பெறலாம். பேச்சு என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் இதை இன்றைய சூழலில் பல சமயங்களில் இழக்க நேரிடுகிறது. இந்த இழப்பை ஈடுகட்டவே மேக்மைட்ரிப் இணையதளம் இந்த புதிய அப்ளிக்கேஷனை உருவாக்கி

பயணத்தை இனிய பயணமாக மாற்றும் புதிய அப்ளிக்கேஷன்!

உள்ளது.

இந்த ட்ரிப்பலாங் அப்ளிக்கேஷன் மூலம் இனி நம்முடன் பயணம் செய்வோர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், பயணத்தை இனிமையான பயணமாக மாற்றலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot