தலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்! இவர் மனிதன் தானா?

|

செய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 74 வயதான ஒருவரின் மண்டையில் கொம்பு போன்ற வடிவம் ஒன்று வளர்ந்துள்ளது. இதை மருத்துவர்கள் 'டெவில்ஸ் ஹார்ன்' (Devils Horn) என்று குறிப்பிட்டுள்ளனர். இவரின் நிலையை கண்ட மருத்துவர்களே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இப்படி ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு, மருத்துவர்கள் என்ன தீர்வை வழங்கியுள்ளனர் என்று தெரியுமா?

தலையில் கொம்புடான் வாழும் ஷாம்

தலையில் கொம்புடான் வாழும் ஷாம்

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், என்ற 74 வயதுடைய நபரின் தலையில் ஒரு வகை அறிய நோயினால் பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் கொம்பு போன்ற வடிவம் உருவாகியுள்ளது. இந்த கொம்புகள் தற்பொழுது அவரின் தலைக்கு வெளியில் மட்டும் வளராமல், தலைக்கு உள் பகுதியிலும் வளரத் துவங்கியுள்ளது.

சிறிய காயத்தினால் உருவான கொம்பு

சிறிய காயத்தினால் உருவான கொம்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, இப்படி அவரின் தலையில் கொம்பு போன்ற வடிவம் உருவாகியுள்ளது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். முதலில் சிறிய காயமாக இருந்துள்ளது, காயம் ஆறியதும், அடிபட்ட இடத்தில் சிறிதாக மேடு போன்று ஷாமின் சதை வளர்ந்துள்ளது.

2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடிப்பு! - வீடியோ

சூரிய ஒளிபட்டால் வளரும் கொம்பு

சூரிய ஒளிபட்டால் வளரும் கொம்பு

பிறகு நாளடைவில் அவரது தலையிலிருந்த மேடு, கடினமான கொம்பாக மாறத் துவங்கியுள்ளது. தற்பொழுது அவர் தலையில் சுமார் 5' இன்ச் நீளத்திற்கு இந்த கொம்பு போன்ற வடிவம் வளர்ந்துள்ளது, சூரிய ஒளிபட்டால் இந்த கொம்புகள் தலைக்குள் வேர் பிடித்து வேகமாக வளரும் என்று அவருக்குத் தெரியவில்லை.

சூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.!

இது என்ன வகை நோய் என்று தெரியுமா?

இது என்ன வகை நோய் என்று தெரியுமா?

மருத்துவர்கள் அவரை பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி, அவருக்கு வந்துள்ள இந்த அரிய வகை நோய் சிபெசியஸ் ஹார்ன் (Sebaceous Horn) என்று கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் தலையில் வளந்துள்ள கொம்பைப் பல முறை ஷாம் தானாகவே வெட்டி நீக்கி வந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.!

நவீன முறைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை

நவீன முறைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை

மருத்துவர்கள் நடத்திய சோதனையில் கொம்பின் வேர்கள், ஷாமின் தலையில் ஆழமாகப் படரவில்லை என்பதனால், உடனே நவீன முறைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து, அவர் தலையிலிருந்த 5' இன்ச் அளவு கொண்ட கொம்பை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

சன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.!

வைரல் செய்தி

வைரல் செய்தி

தலையில் கொம்பு முளைத்த இந்த மனிதனின் கதை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் ஷாம் நலமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Madhya Pradesh Man Grows Devil Horn On Head After Injury is He's Really Human : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more