503 பேஸ்புக், டிவிட்டர் பதிவுகள் அதிரடி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம்.!
தேர்தல் விதிகளை மீறியதாக சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 503 பதிவுகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு சமூக வலைதளங்களில் போலி செய்தி மற்றும் அவதூறான செய்திகளை பரப்ப கூடாதென்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறியதாக சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 503 பதிவுகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 பேஸ்புக் பதிவுகள் நீக்கம்
சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள 503 போலி பதிவுகளில் சுமார் 500 பேஸ்புக் பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரில் & வாட்ஸ் ஆப் பதிவுகள் நீக்கம்
பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்ட 500 பதிவுகள் போக, இரண்டு போலி பதிவுகளை டிவிட்டரில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்க ஆணையிட்டுள்ளது. அத்துடன் ஒரு வாட்ஸ் ஆப் போலி செய்தியும் அதிரடியாக நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குனர் ஜெனரல் திரேந்திர ஓஜா தெரிவித்தார்.

48 மணி நேரத்திற்குள் நீக்கம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்ட கோரிக்கையின் பெயரில், விதிகளை மீறும் பதிவுகளை 48 மணி நேரத்திற்குள் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை
தேர்தலையொட்டி பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் மீது இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications