கூடுதல் பாதுகாப்பினை வழங்கும் லின்க்டுஇன்!

Posted By: Staff

மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளம் லின்க்டுஇன். இந்த லின்க்டுஇன் வலைத்தளத்தினை பயன்படுத்தும் பலரது பாஸ்வேர்டுகள் சமீபத்தில் திருடப்பட்டது.

இதை தொடர்ந்து பாஸ்வேர்டுகளை திருட முடியாத வகையில், இதன் பாதுகாப்பினை பலப்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறது லின்க்டுஇன் நிறுவனம்.

பல பேர் இந்த லின்க்டுஇன் வலைத்தளத்தினை ப்ரொஃபஷனலாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தங்களது பரொஃபைல்களில் படிப்பு, வேலை, முகவரி, வேலை பார்க்கும் இடம் என்று முழு உண்மை விவரத்தினையும் பதிவு செய்துள்ளனர்.

கூடுதல் பாதுகாப்பினை வழங்கும் லின்க்டுஇன்!

இந்த ப்ரொஃபைல்களில் உள்ள படிப்புக்கு ஏற்றவேலை வாய்ப்பினை பெறும் வசிதியினையும் இந்த லின்க்டுஇன் மூலம் பெறலாம்.

ஒருவரின் முக்கிய விவரங்கள் நிரம்பிய லின்க்டுஇன் பக்கங்களை பாஸ்வேர்டு இருந்தால் பார்க்கலாம். இந்த பாஸ்வேர்டுகள் சில தகாத வேலைகளை செய்யும் குழுவினர்களால் திருடப்படுவது, மிகுந்த ஆபத்தினை ஏற்படுத்தும்.

லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் அக்கவுன்டு வைத்திருப்பவர்களது பாஸ்வேர்டுகள் திருடப்பட்டிருந்தால், பாஸ்வேர்டை மாற்ற சொல்லி ஆட்டோமெட்டிக்காக இ-மெயில் வரும். அதன் பிறகு பாஸ்வேர்டை மாற்றிவிட்டால் ஆபத்து ஏதும் இல்லை. ஆனால் இது சரியான தீர்வு இல்லை.

இதனால் லின்க்டுஇன் நிறுவனம் இப்போது, இந்த வலைத்தளத்தினை பயன்படுத்துவோரது பாஸ்வேர்டுகளை திருடாத வகையில், பாதுகாப்பினை பலப்படுத்த இருப்பது சிறந்த முடிவு தான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்