Home
Social media

லிங்க்டுஇன் உறுப்பினர்கள் கவனத்திற்கு...!

By Karthikeyan
லிங்க்டுஇன் உறுப்பினர்கள் கவனத்திற்கு...!

லிங்க்ட்இன் என்பது பேஸ்புக்கைப் போன்ற ஒரு சமூக வலைத்தளமாகும். ஆனால் இது ஒரு முழுமையான சமூக தளம் அல்ல. மாறாக நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்கள் பணி அனுபவங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் மற்றும் பயோ டேட்டாக்கள் ஆகியவற்றை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பர். இதே ஒரு வேலை வாய்ப்புக்கான வலைத்தளம் என்று கூட அழைக்கலாம்.

சமீபத்தில் ஒரு சிலர் லிங்க்டுஇன்னில் உள்ள 6 மில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகளைத் திருடி இருக்கின்றனர். அதனால் லிங்க்ட்இன் உறுப்பினர்கள் தங்கள் லிங்க்ட்இன் பாஸ்வேர்டுகளை மட்டும் அல்ல தங்களது மற்ற இணையதள பாஸ்வேர்டுகளையும் மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

லிங்க்ட்இன் நிறுவனமும் தனது உறுப்பினர்கள் அவர்களது பாஸ்வேர்டுகளை மாற்ற பரிந்துரைக்கிறது. ஏனெனில் லிங்க்ட்இன்னில் உள்ள பாஸ்வேர்டுகளையே பலர் தங்களது கூகுள், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதர இணையதள கணக்குகளில் பதிவு செய்து வைத்திருப்பர்.

இப்போது லிங்க்ட்இன் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டிருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி லிங்க்ட்இன் உறுப்பினர்களின் மற்று இணையதள கணக்குகளும் திருடப்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே லிங்க்ட்இன் உறுப்பினர்கள் மிக விரைவில் தங்களது இணையதள பாஸ்வேர்டுகளை மாற்றம் செய்வது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எவ்வாறு பாஸ்வேர்டுகளை மாற்றுவது என்று லிங்க்ட்இன் நிறுவனம் தங்களது உறுப்பினர்களுக்கு இமெயில் மூலம் தகவலை அனுப்பும். அதற்கடுத்து லிங்க்ட்இன் வாடிக்கையாளர் சேவை மையமும் இரண்டாவது இமெயில் அனுப்பும். அதன்படி செய்தால் லிங்க்ட்இன் வாடிக்கையாளர்கள் புதிய ரகசியமான இணையதள பாஸ்வேர்டுகளைப் பெறலாம். அவர்களில் இணையதள கணக்குகள் ரகசியமாகவும் பத்திரமாகவும் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X