கூகிள் மேப்ஸ் காட்டும் ஆண் பிறப்புறுப்பு சிற்பம் கலாச்சார நினைவுச்சின்னமா? தொடரும் அடுத்தடுத்த மர்மம்.!

|

பூமியில் மூன்று இடங்களில் மர்மமான முறையில் மோனோலித்துகள் தோன்றிய புதிய சர்ச்சைக்குப் பிறகு, இப்பொழுது மீண்டும் ஜெயிண்ட் பல்லஸ் சிற்பம் என்று அழைக்கப்படும் ஆண் பிறப்புறுப்பு வடிவிலான சிற்பம் பற்றி புதிய சர்ச்சை கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த சிற்பம் மர்மமான முறையில் காணாமல் போனது. ஆனால், காணாமல் போன சிற்பம் இப்பொழுது அதைவிடப் பெரிய உருவத்தில் மலை உச்சியில் நிமிர்ந்து நிற்கிறது.

பிக் பல்லஸ் சிற்பம்

பிக் பல்லஸ் சிற்பம்

பிக் பல்லஸ் சிற்பம் என்று அழைக்கப்படும் ஆண் பிறப்புறுப்பு போன்ற இந்த சிற்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஜெர்மனியில் உள்ள பவேரியன் மலைப்பகுதியில் மர்மமான முறையில் 1,738 மீட்டர் (5,702 அடி) உயரத்தில் தோன்றியது. கிட்டத்தட்ட 7 அடி உயரத்தில் தோன்றிய இந்த சிற்பம் அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்தது, இன்னும் சிலரை முகம் சுளிக்கச் செய்தது. இந்த சிற்பம் தோன்றிய சில நாட்களிலேயே மிகவும் பிரபலமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகிள் மேப்ஸில் கலாச்சார நினைவுச்சின்னம் என்று குறிப்பிடப்பட்ட சிற்பம்

கூகிள் மேப்ஸில் கலாச்சார நினைவுச்சின்னம் என்று குறிப்பிடப்பட்ட சிற்பம்

பல ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் இந்த சிற்பம், மலையேறுபவர்களுக்கு ஒரு செல்ஃபி தளமாக மாறியது. கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் கூட இந்த சிற்பம் இருக்கும் இடம் 'கலாச்சார நினைவுச்சின்னம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது வேடிக்கையான உண்மையாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிற்பம் கவிழ்ந்தது, கீழே விழுந்த அதே வாரத்தில், இந்த சிற்பம் மர்மமான முறையில் அதன் இடத்திலிருந்து காணாமல் போனது.

ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!

மோனோலித் காணாமல் போன அதே மர்மம்

மோனோலித் காணாமல் போன அதே மர்மம்

மோனோலித்துகள் தோன்றி காணாமல் போன அதே நேரத்தில் இந்த பல்லஸ் சிற்பமும் காணாமல் போனது. சிற்பம் இருந்த இடத்தில் வெறும் மரத்தூள் குவியல் மட்டுமே காணப்பட்டது என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். மர்மமாகக் காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு, அதேபோன்ற மரச் செதுக்குதல் இப்பொழுது அதன் இடத்திலேயே தோன்றியுள்ளது.

மிகப் பெரிய உருவத்தில் மீண்டும் தோற்றம்

மிகப் பெரிய உருவத்தில் மீண்டும் தோற்றம்

அதுவும், முன்பை விட மிகப் பெரிய உருவத்தில் மர்மமான முறையில் தோன்றியுள்ளது. சிற்பம் காணாமல் போனதை உள்ளூர் போலீசார் உறுதிப்படுத்திய பின்னர், கடந்த வியாழக்கிழமை கதை மேலும் ஒரு திருப்பத்தை எடுத்துள்ளது. சிற்பம் காணாமல் போன அந்த இடத்தில் ஒரு புதிய சிற்பம் சற்றே பெரிய உருவத்தில் இப்பொழுது அமைத்துள்ளது. காணாமல் போன ஆண் பிறப்புறுப்பு போன்ற உருவம் மீண்டும் தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலக போரில் நாஜி தலைவர்கள் பயன்படுத்திய எனிக்மா இயந்திரம் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு..இரண்டாம் உலக போரில் நாஜி தலைவர்கள் பயன்படுத்திய எனிக்மா இயந்திரம் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு..

குழப்பத்தில் போலீஸ்

குழப்பத்தில் போலீஸ்

உண்மையில் இந்த சிலைக்கும் இந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? இந்த செயலை இதற்கு முன்பு யார் செய்தார்கள்? எதற்காகச் செய்தார்கள்? இந்த சிற்பத்திற்கான அர்த்தம் என்ன? என்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில், இப்பொழுது காணாமல் போன சிற்பத்தை மீண்டும் பெரிய உருவத்தில் செய்து|வைத்தது யார் என்று தெரியாமல் போலீஸ் குழப்பத்தில் உள்ளது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Large Phallus Statue Appears On Bavarian Mountain After Similar Structure Vanished Mysteriously : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X