கேரளாவுக்கு நிதியாக ரூ.2கோடி நிலம் வழங்கிய பள்ளி மாணவி: பேஸ்புக்கும் ரூ.1.75 கோடி வழங்கியது.!

கடந்த சில மாதங்களாக கேராளாவில் மழை பெய்து வந்தது. மேலும் தொடர்ந்து பெய்த கன மழையால், 13 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்

|

கொழிஞ்சாம்பாறை: கேரளாவில் தற்போது பெய்த மழையால், வெள்ளம் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கேரளாவுக்கு நிதியாக பள்ளி மாணவி  ரூ.2 கோடி, பேஸ்புக் 1.75 கோடி

இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியை வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவி ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை வெள்ள நிவாரணத்துக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வெள்ளம்:

கேரளாவில் வெள்ளம்:

கடந்த சில மாதங்களாக கேராளாவில் மழை பெய்து வந்தது. மேலும் தொடர்ந்து பெய்த கன மழையால், 13 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முகாம்கள்:

முகாம்கள்:

கேரளாவில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், காவலர்கள், ஆர்எஸ்எஸ், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் மீட்டு பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசி தேவைகள் வழங்கப்படுகிறது.

நிவாரண நிதி:

நிவாரண நிதி:

இதைத்தொடர்ந்து இந்தியாவில் தமிழகம் வெள்ள நிவாரண நிதியை கேரளாவுக்கு அதிமாக அளித்து வருகின்றது. மேலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். தற்போது கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. பொது மக்கள் இடம் பெயரும் போது, அவர்களின் விடு, சொத்து, சான்றிதழ்கள் உள்ளிட்ட உடமைகள் அனைத்தும் பறிபோயுள்ளது. ஆகவே ஏராளமானோர் இதை கருத்தில் கொண்டு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் தாராளம்:

பள்ளி, கல்லூரி மாணவிகள் தாராளம்:

தமிழகத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பினரும் கேரளாவுக்கு அளிக்கும் நிதி உதவி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 9 வயது பள்ளி மாணவி தான் சைக்கிள் வாங்க வைத்திருந்த ரூ.9 ஆயிரம் பணத்தை கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக வழங்கினார்.
கேரளாவில் மீன் விற்று தான் கல்லூரி கட்டணம் செலுத்தி வந்த மாணவி ஹனான், நிலையறிந்து கேரள மக்கள் ரூ.1.5 லட்சம் நிதி வழங்கினர். இதை இந்த மாணவி தற்போது கேரள நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார். மேலும் தற்போது பள்ளி கல்லூரி மாணவிகள் தங்கள் வாழ்க்கை கூட இல்லாத நிலையில், கேரளாவுக்கு நிதி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2 கோடி நிலம் தானம்:

ரூ.2 கோடி நிலம் தானம்:

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பைனூரை சேர்ந்த சங்கரன் மகள் ஸ்வகா (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கேரளாவுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய மாணவி தனது தந்தை எழுதி வைத்திருந்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்குவதாக கேரள முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

முதல்வர் பாராட்டு :

முதல்வர் பாராட்டு :

கடிதத்தை படித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த கடித்தை படித்து நெகிழ்ச்சியடைந்தார். மேலும் முதல்வர் வழிகாட்டுதலின் படி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள தனது 1 ஏக்கர் நிலத்தை மாணவி ஸ்வாக அளித்தார். தற்போது இச்செய்தி இணையதளங்கள் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இதைடுத்து மாணவியின் நிவாரணம் வழங்கியதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

பேஸ்புக் ரூ.1.75 கோடி உதவி:

பேஸ்புக் ரூ.1.75 கோடி உதவி:

உலகின் முன்னணியில் உள்ள சமூக வலைத்தளமான பேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் பண்ட் பார் கூன்ஜ் எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Kerala flood student 2 crore fund : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X