கேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்:முடிந்தால் உதவுங்கள் தமிழக மக்களே.!

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக சேலான மழை பெய்யத் துவங்கியது. தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அணைகள் நிரம்பின.

|

இடுக்கி: கேரளாவில் தற்போது பேய் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்.!

இந்த மழையால், இதுவரை 30 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்த காட்சிகள் சமூக இணைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

24 அணையில் தண்ணீர் வெளியேற்றம்:

24 அணையில் தண்ணீர் வெளியேற்றம்:

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக சேலான மழை பெய்யத் துவங்கியது. தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அணைகள் நிரம்பின. அதைத்தொடர்ந்து காட்டாருகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழையின் போக்கு மேலும் வலுவடைந்துள்ளதால், தெருக்களிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கேரளாவில் உள்ள 24 அணைகளும் நிரம்பின. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.

பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பு:

பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பு:

கோழிக்கோடு மாவட்டத்தில் வெள்ளத்தில் வீடுகள் அடித்து சென்றன. இதில் ஒரு சிறுமி, இளைஞர் ஆகியோரை காணவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் படையினர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை இழந்தோர் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து 10 பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் பேர் மீட்பு:

10 ஆயிரம் பேர் மீட்பு:

வெள்ளத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீடக்பட்டனர். 100க்கும் மேற்பட்ட முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை மழைக்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள காட்சி புகைப்படங்கள் சமூக இணைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

48 மணி நேரம் எச்சரிக்கை:

48 மணி நேரம் எச்சரிக்கை:

இந்த மழையின் போக்கு வரும் 48 மணி நேரத்திற்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. பொது மக்கள் யாரும் வீடுகள், தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருந்தும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உதவி மைய எண்கள்:

உதவி மைய எண்கள்:

மேலும் மழையால் பாதிக்கப்பட்டோர் உணவு உள்ளிட்ட உதவிகளை பெறவும், மீட்பு பணிகளில் தேவை என்றாலும் கீழ்காணும் மாவட்டம் வரியாக உதவி பெரும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி மைய எண்கள் கீழே:

திருவனந்தபுரம் 0471-2730045, கொல்லம் 0474-2794002, பத்தினம்திட்டா 0468-2322515, ஆலப்புழா 0477-2238630, கோட்டயம், 0481-2562201, இடுக்கி 0486-2423513, திருச்சூர் 0487-23622424, பாலக்காடு 0491-2505309, மலப்புரம் 0483-2736320, கோழிக்கோடு 0495-2371002, வயநாடு 9207985027, கண்ணூர் 0468-2322515 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு:

முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு:

இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் விமானத்தில் செய்து பார்வையிட்டார். மேலும், மீட்பு பணிகள், நிவாரணம், முகாம்களில் உதவிகளை துரிதமாக வழங்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Kerala death toll climbs to 26 after triggers floods landslides: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X