ரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி!

|

கென்யாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி ஒருவர், 22 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கிய ரூ.200 கடனை திருப்பிச் செலுத்துவதற்காகக் கென்யாவிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரத்திற்குச் வந்திருக்கிறார். இந்த சம்பவம் சமூகவலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

ரிச்சர்ட் நயாககா டோங்கி வாங்கிய கடன்

ரிச்சர்ட் நயாககா டோங்கி வாங்கிய கடன்

ரிச்சர்ட் நயாககா டோங்கி 1985-1989 வரை மவுலானா ஆசாத் கல்லூரியில், மேலாண்மை படித்திருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் தான், குவாலி என்ற பலசரக்குக் கடைக்காரர் இவருக்கு உணவு வழங்கி வந்திருக்கிறார். இவருக்குத் தான் கென்யாவைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி ரூ.200 கடனை திருப்பி தர வேண்டியதிருந்தது என்று கூறப்படுகிறது.

22 ஆண்டுகளுக்கு முன் | 22 ஆண்டுகளுக்கு பின்

22 ஆண்டுகளுக்கு முன் | 22 ஆண்டுகளுக்கு பின்

22 ஆண்டுகளுக்கு முன் தான் கடன் பட்டிருந்ததை திருப்பி கொடுப்பதற்காகக் கென்யாவிலிருந்து தன் மனைவியுடன் இந்தியா வந்த டோங்கி, காஷிநாத் குவாலியை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு குவாலியை சந்தித்ததும் மனம் நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்டதாகத் டோங்கி தெரிவித்திருக்கிறார்.

<span style=டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.! " title="டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.! " loading="lazy" width="100" height="56" />டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.!

பேஸ்புக் பக்க பதிவு

பேஸ்புக் பக்க பதிவு

கல்லூரி பயின்று வந்த காலத்தில் காஷிநாத் குவாலி வழங்கிய உணவிற்குப் பணம் செலுத்தாமல் நாடு திரும்பிவிட்டேன், பல ஆண்டுகளாக இது என் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. திருமணம் ஆனபிறகு கண்டிப்பாகத் இந்த தொகையை நேரில் சென்று திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்,அதற்கான நேரம் இப்பொழுது கிடைத்துவிட்டது என்று அவர் பேஸ்புக் பக்கத்தில் டோங்கி பதிவிட்டுள்ளார்.

<span style=பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்! " title="பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்! " loading="lazy" width="100" height="56" />பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்!

காஷிநாத் குவாலி வீட்டில் உணவு

காஷிநாத் குவாலி வீட்டில் உணவு

படிக்கும் காலத்தில் உணவு வழங்கி உதவியவர் காஷிநாத் குவாலி என்றும், இவருக்குப் பட்ட கடனை திருப்பி கொடுத்ததில் ஆனந்தம் என்றும் தெரிவித்திருக்கிறார். கடனை திருப்பிக்கொடுத்த பின் காஷிநாத் குவாலி வீட்டில் உணவு அருந்திவிட்டு, அவர் படித்த கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடி இருக்கிறார் ரிச்சர்ட் நயாககா டோங்கி.

<span style=தமிழ்நாட்டில் தயாராகிறது: ஐபோன்களுக்கு இனி மலிவு விலை.! " title="தமிழ்நாட்டில் தயாராகிறது: ஐபோன்களுக்கு இனி மலிவு விலை.! " loading="lazy" width="100" height="56" />தமிழ்நாட்டில் தயாராகிறது: ஐபோன்களுக்கு இனி மலிவு விலை.!

உண்மையான 'மனிதர்'

உண்மையான 'மனிதர்'

வாங்கிய பல கோடி கடனை திருப்பி கொடுக்க மனமில்லாத பல மனிதர்களுக்கு இடையில், 22 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்க மறந்த ரூ.200 ஐ திருப்பி கொடுக்க கென்யாவிலிருந்து மகாராஷ்டிரா வந்த நாடாளுமன்ற எம்.பி ரிச்சர்ட் நயாககா டோங்கியை உண்மையான 'மனிதர்' என்று நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Kenyan MP returns to India to repay Rs 200 debt after 22 years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X