டேட்டா, இலவச கால் பிரமாண்டத்தை தொடர்ந்து நமது பொங்கல் விழாவிலும் சாதனப்படைத்த ஜியோ.!
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், மாணவர்கள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர்.
ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த கால் அழைப்பு வசதிகள் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்கிவருகிறது. பின்பு இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது ஜியோ நிறுவனம்.

மேலும் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது,பின்பு பண்டிகைக்காக மக்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டம்
இதனை தொடரந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கே.எஸ். ஆர் கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பொங்கல் வைத்து சாதனை படைக்க திட்டமிட்டனர், இதில் ஜியோ நிறுவனமும் இணைந்து மாணவிகள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை உலக சாதனைக் கொண்டு சென்றது.

சண்முகம்
இந்நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது, குறிப்பாக இந்த யூனிக் உலக சாதனை நிகழ்ச்சியை திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சம்
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், மாணவர்கள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கல் நிகழ்ச்சியை யூனிக் உலக சாதனை தலைமை தீர்ப்பாளர் ரஹீமான்
கண்காணித்தார்.

1800 மாணவிகள்
மேலும் இந்த யூனிக் உலக சாதனைக்காக 1800 மாணவிகள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று அனைவரும் சேர்ந்து மொத்தம் 450 கிலோ பொங்கல் வைத்து உலக சாதனை படைத்ததாக ரஹீமான் என்பர் தெரிவித்தார். பின்பு இந்த உலக சாதனைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications