எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வாய்பிளக்க வைக்கும் "சூப்பர் மூன்" புகைப்படம்

|

சூப்பர் மூன் புகைப்படம் சமீபத்தில் விண்வெளி நிலையத்தின் மூலம் எடுக்கப்பட்டது. சந்திரன் எந்த நிலையில் இருந்தாலும் விண்வெளியில் அது அற்புதமான பார்வை என சர்வதேச விண்வெளி நிலையம் தெரிவித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியன் சுற்றுப்பாதையில் இருந்து சூப்பர் பிங்க் மூன் ஆச்சரியமூட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

விண்வெளி வீரர்கள் பகிர்ந்த சூப்பர் மூன்

விண்வெளி வீரர்கள் பகிர்ந்த சூப்பர் மூன்

விண்வெளி வீரர்கள் பகிர்ந்த சூப்பர் மூன் புகைப்படம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. சந்திரன் எந்த விதத்தில் எந்த கட்டத்தில் இருந்தாலும் அது விண்வெளியில் இருந்து அற்புதமான பார்வையை வழங்குகிறது என்று ஐஎஸ்எஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது.2021 ஆம் ஆண்டு முதல் சூப்பர் மூன் கடந்த மாதம் 27 ஆம் தேதி தோன்றியது. வெனிசூலா, சிலி, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் மூன்று நாட்களுக்கு தோன்றிய சூப்பர் மூனை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்

நிலையம் பகிர்ந்து கொண்ட புகைப்படமானது பூமியை அடிப்படையாகக் கொண்டு சூரியனுக்கு எதிரே நிலவு இருக்கும் இரவு 11:32 மணிக்கு தோன்றும் போது எடுக்கப்பட்டது. இந்தாண்டு முழு நிலவுகளில் பெரிய நிலவு ஏப்ரல் 7 ஆம் தேதி உயர்ந்தது என நாசா தெரிவித்தது. பிங்க் மூன் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. இந்த புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் ஆச்சரியமூட்டும் புகைப்படம், அழகு, வியக்கத்தக்க புகைப்படம் என பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஆச்சரியங்கள் நிறைந்த விண்வெளி

ஆச்சரியங்கள் நிறைந்த விண்வெளி

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. விண்வெளி என்பது ஒரு ஆச்சரியமே.

நேச்சுரல் சாட்டிலைட்

நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்ய ஆர்வம் காட்டும் நாடு அதிகம். பூமியை சுற்றி வரும் "நேச்சுரல் சாட்டிலைட்" அதாவது இயற்கையாக உருவான செயற்கைகோள் என்று அழைக்கப்படும் சந்திர கிரகம் ஆனது, பூமிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஒற்றை கட்டுரையில் கூறி விட முடியாது.

நீரின் மூலக்கூறுகள்

நீரின் மூலக்கூறுகள்

நிலவில் நகரும் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது நாசாவின் லூனார் ரிகான்ஸின்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) ஆகும். இது நிலவை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் நிலவின் சுற்றுப்பாதைக்குள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் அனுப்பப்பட்ட ஒரு விண்கலம் என்பதும், இது நிலவின் மேற்பரப்பை மிகவும் விரிவாக ஆய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சி

விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சி

விண்வெளி ஆய்வு குறித்து பார்க்கையில், பிற நாடுகளைவிட சீனா தாமதமாகவே இந்த தளத்தில் அடியெடுத்து வைத்தது. இருப்பினும் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சி பிறநாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்தது. இந்த வரிசையில் மூன்றாவது நாடாக சீனா நிலவின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

நிலவில் நிலைநாட்டப்பட்ட கொடி

நிலவில் நிலைநாட்டப்பட்ட கொடி

அமெரிக்காவிற்கு பிறகு நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடாக சீனா இருக்கிறது. நிலவில் நாட்டிய சீன கொடியின் படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர கோடிக்கணக்கில் சீனா முதலீடு செய்தது. ஒரு வார பயணத்துக்கு பிறகு விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து நிலவின் மூலக்கூறுகளை கண்டறியவும் நிலவை ஆராய்ச்சி செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்., தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ISS Photographed Pink Super Moon From Space Station: Netizens Reaction

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X